• Apr 15 2026

ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவன் உயிரிழப்பு - வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Chithra / Apr 10th 2026, 12:01 pm
image

கொழும்பு -  ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் புத்தாண்டு விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன.


அதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவில் தனியார் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்துள்ளது.


அந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளதுடன், அவர் பின்னால் ஒரு மாணவனும் சென்றுள்ளார்.


அதைக் கண்ட அந்த மாணவியின் நண்பர் அதாவது உயிரிழந்த மாணவன், அவளுக்குப் பின்னால் சென்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.


அந்த நேரத்தில், தாக்குதலுக்குள்ளான மாணவனின் நண்பர்கள் குழுவொன்று, தாக்குதல் நடத்திய மாணவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.


தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த மாணவரை விடுதி ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவன் உயிரிழப்பு - வெளியான திடுக்கிடும் உண்மைகள் கொழும்பு -  ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்தப் புத்தாண்டு விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன.அதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவில் தனியார் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்துள்ளது.அந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளதுடன், அவர் பின்னால் ஒரு மாணவனும் சென்றுள்ளார்.அதைக் கண்ட அந்த மாணவியின் நண்பர் அதாவது உயிரிழந்த மாணவன், அவளுக்குப் பின்னால் சென்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.அந்த நேரத்தில், தாக்குதலுக்குள்ளான மாணவனின் நண்பர்கள் குழுவொன்று, தாக்குதல் நடத்திய மாணவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த மாணவரை விடுதி ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement