• Sep 20 2024

இலங்கையில் குழந்தைகளுக்கிடையே இனங்காணப்பட்ட பிரச்சினை! ஆய்வில் வெளியான தகவல்

Chithra / Aug 8th 2024, 1:01 pm
image

Advertisement

 

இலங்கையில் குழந்தைகளுக்கிடையே உறக்கமின்மை பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியர் மேலும் தெரிவித்தாவது,

பிள்ளைகளுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்குத் தேவையான விடயங்களைச் செய்வது பெற்றோரின் பொறுப்பாகும்.

இலங்கைச் சிறுவர்கள் மத்தியில் உறக்கம் குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, 25% குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் உறக்கமின்மை பிரச்சினை உள்ளது.

இதேவேளை, இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு தூக்கமின்மையின் விளைவுகள் உள்ளன.

இந்நிலையில், ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உறங்க வேண்டும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, பிறந்த மூன்று மாதங்களில், குழந்தைகள் சுமார் 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும்.

4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, 12 முதல் 16 மணி நேரம், ஒரு வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை, 11 முதல் 14 மணி நேரம், 5 வயது குழந்தைக்கு 10 முதல் 13 மணி நேரம் வரை 50% உறக்கம் தேவை.

இதேவேளை, வயது வந்தவர் குறைந்தது 7 மணிநேரம் தூங்க வேண்டும். 

இவ்வாறு ஒழுங்கான உறக்கம் இன்மை மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் பாதிக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் குழந்தைகளுக்கிடையே இனங்காணப்பட்ட பிரச்சினை ஆய்வில் வெளியான தகவல்  இலங்கையில் குழந்தைகளுக்கிடையே உறக்கமின்மை பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த விடயம் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வைத்தியர் மேலும் தெரிவித்தாவது,பிள்ளைகளுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்குத் தேவையான விடயங்களைச் செய்வது பெற்றோரின் பொறுப்பாகும்.இலங்கைச் சிறுவர்கள் மத்தியில் உறக்கம் குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, 25% குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் உறக்கமின்மை பிரச்சினை உள்ளது.இதேவேளை, இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு தூக்கமின்மையின் விளைவுகள் உள்ளன.இந்நிலையில், ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உறங்க வேண்டும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.அதன்படி, பிறந்த மூன்று மாதங்களில், குழந்தைகள் சுமார் 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும்.4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, 12 முதல் 16 மணி நேரம், ஒரு வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை, 11 முதல் 14 மணி நேரம், 5 வயது குழந்தைக்கு 10 முதல் 13 மணி நேரம் வரை 50% உறக்கம் தேவை.இதேவேளை, வயது வந்தவர் குறைந்தது 7 மணிநேரம் தூங்க வேண்டும். இவ்வாறு ஒழுங்கான உறக்கம் இன்மை மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் பாதிக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement