• Nov 25 2024

நெடுவூர் திருவிழா தொடர்பில் முன்னேற்பாட்டு குழு கலந்துரையாடல்

Tharun / Jul 22nd 2024, 6:51 pm
image

நெடுந்தீவு மண்ணில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி தொடக்கம் 10 வரை நடைபெறவுள்ள "மீண்டும் ஊருக்கு போவோம்" என்னும் தொனிப்பொருளில் நெடுவூர் திருவிழா நடைபெறவுள்ளது.

இத் திருவிழா முன்னேற்பாட்டு குழு கலந்துரையாடல் இன்று வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன்  இளங்கோவன் தலமையில் நடைபெற்றது.


இக் கலந்துரையாடலில் நெடுவூர் திருவிழாவிற்கு வருபவர்களுக்கான சுகாதாரம், குடிநீர், உணவு ,பாதுகாப்பு, போக்குவரத்து தங்குமிட வசதிகள் வசதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேற்படி நிகழ்விற்கு திணைக்களங்கள் சரியான முறையில் ஒத்துழைத்து பங்காற்ற வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளரால் பணிப்புரை விடுக்கப்பட்டது


இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள் துறைசார் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


நெடுவூர் திருவிழா தொடர்பில் முன்னேற்பாட்டு குழு கலந்துரையாடல் நெடுந்தீவு மண்ணில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி தொடக்கம் 10 வரை நடைபெறவுள்ள "மீண்டும் ஊருக்கு போவோம்" என்னும் தொனிப்பொருளில் நெடுவூர் திருவிழா நடைபெறவுள்ளது.இத் திருவிழா முன்னேற்பாட்டு குழு கலந்துரையாடல் இன்று வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன்  இளங்கோவன் தலமையில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் நெடுவூர் திருவிழாவிற்கு வருபவர்களுக்கான சுகாதாரம், குடிநீர், உணவு ,பாதுகாப்பு, போக்குவரத்து தங்குமிட வசதிகள் வசதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.மேற்படி நிகழ்விற்கு திணைக்களங்கள் சரியான முறையில் ஒத்துழைத்து பங்காற்ற வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளரால் பணிப்புரை விடுக்கப்பட்டதுஇக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள் துறைசார் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement