• Sep 04 2026

உத்தேச ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் - விசாரணை ஆரம்பம்

Chithra / Sep 3rd 2026, 12:28 pm
image



அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. 


இந்த மனுக்கள் இன்று (03) ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 


குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரால் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 


உத்தேச சட்ட மூலத்தில் அடங்கியுள்ள ஏற்பாடுகள் ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். 


அத்துடன், இந்தச் சட்ட மூலத்தின் ஊடாக தகவல் அறியும் உரிமையும் மட்டுப்படுத்தப்படுவதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்கமைய, குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அது அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

உத்தேச ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் - விசாரணை ஆரம்பம் அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. இந்த மனுக்கள் இன்று (03) ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரால் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உத்தேச சட்ட மூலத்தில் அடங்கியுள்ள ஏற்பாடுகள் ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், இந்தச் சட்ட மூலத்தின் ஊடாக தகவல் அறியும் உரிமையும் மட்டுப்படுத்தப்படுவதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அது அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement