• Mar 31 2025

Thansita / Mar 29th 2025, 12:40 pm
image

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழகம் மாணவர்கள் வெள்ளிக்கிழமை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

வியாழக்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 27 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

 இவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

 கைது செய்யப்பட்ட மற்ற 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

கைது செய்த பல்கலை மாணவர்களை விடுவிக்கக்கோரி போராட்டம். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழகம் மாணவர்கள் வெள்ளிக்கிழமை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.வியாழக்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 27 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கைது செய்யப்பட்ட மற்ற 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement