தமிழர் பகுதிகளில் மாத்திரமின்றி நாடு தழுவிய ரீதியில் பரவலாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி தேர்தலின் போது வாக்குகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது.
வாக்காளர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையிலேயே உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேர்தல் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழர் பகுதிகளில் மாத்திரமின்றி நாடு தழுவிய ரீதியில் பரவலாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் வாக்குகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பம் குறைவு - மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம் தமிழர் பகுதிகளில் மாத்திரமின்றி நாடு தழுவிய ரீதியில் பரவலாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தலின் போது வாக்குகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது.வாக்காளர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையிலேயே உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அமையும் என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை தேர்தல் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், தமிழர் பகுதிகளில் மாத்திரமின்றி நாடு தழுவிய ரீதியில் பரவலாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.