நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு ரணிலின் ஆதரவாளர்கள் திரண்டனர்.
ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றித் திரண்டதால் அங்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
எனினும் அவற்றை மீறி ரணிலின் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன்போது அநுர கோ கோம் எனவும் கோஷமிட்டு பெரும் ரகளையை ஏற்படுத்தியிருந்தனர்.
கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டதால் பொலிஸாருக்கும் ரணிலின் ஆதரவாளர்களுக்கும் அங்கு முறுகல்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீசிய பொருளால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதற்கிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது, ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் இருந்து கொண்டு சூம் செயலியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணிலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்; பொலிஸார் மீது தாக்குதல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு ரணிலின் ஆதரவாளர்கள் திரண்டனர்.ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றித் திரண்டதால் அங்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். எனினும் அவற்றை மீறி ரணிலின் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன்போது அநுர கோ கோம் எனவும் கோஷமிட்டு பெரும் ரகளையை ஏற்படுத்தியிருந்தனர். கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டதால் பொலிஸாருக்கும் ரணிலின் ஆதரவாளர்களுக்கும் அங்கு முறுகல்நிலை ஏற்பட்டது. இந்த நிலையிலேயே நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீசிய பொருளால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.இதற்கிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது, ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் இருந்து கொண்டு சூம் செயலியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.