தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு எதிராக மலையகத்தில் ஐந்து இடங்களில் இன்று போராட்டங்கள் நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மூன்று மாவட்டங்களில் ஐந்து பிரதான நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை நகரில் வினாயகர் ஆலயத்திற்கு முன் மற்றும் பொகவந்தலாவை நகரில் மாலை 02 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அத்தோடு சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி காவத்தை, கேகாலை தெஹியோவிட்ட நகரத்திலும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
மேலும் ஊவா மாகாணத்தில் பதுளை நகரத்திலும், மனோ கணேசன் எம்.பிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மனோ எம்.பிக்கு எதிராக வெடிக்கவுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் - அமைச்சர் ஜீவன் அதிரடி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு எதிராக மலையகத்தில் ஐந்து இடங்களில் இன்று போராட்டங்கள் நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.மூன்று மாவட்டங்களில் ஐந்து பிரதான நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை நகரில் வினாயகர் ஆலயத்திற்கு முன் மற்றும் பொகவந்தலாவை நகரில் மாலை 02 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.அத்தோடு சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி காவத்தை, கேகாலை தெஹியோவிட்ட நகரத்திலும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.மேலும் ஊவா மாகாணத்தில் பதுளை நகரத்திலும், மனோ கணேசன் எம்.பிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.