• Nov 19 2024

பி.எஸ்.எம் சாள்ஸ் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிப்படுத்தியுள்ளார்- உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டு

Anaath / Aug 23rd 2024, 6:29 pm
image

தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவராக இருந்த பி.எஸ்.எம் சாள்ஸ்  உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கிய சத்தியக் கூற்றின்  மூலம் உச்ச நீதிமன்றத்தை  தவறாக வழிநடத்தியமை தெளிவாவதாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறுத்தப்பட்ட மைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கில் தீர்ப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

நவம்பர் 2022 தொடக்கம் கடந்த ஆண்டு முதலாம் மாதம் 26 ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்தவராக கடமையாற்றிய காலப்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமான கூட்டம் எதிலும் பங்குபற்றவில்லை எனவும் எனவே தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களே உள்ளூராட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்க் கொண்டு இருந்தார்கள்.

எனவே அவர்கள் எடுத்த தீர்மானங்கள் முறையற்றது என பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனினும் நடந்த 5 கூட்டத்தில் இரண்டிற்கு சாள்ஸ் சென்றுள்ளதும் மூன்றினை தவிர்த்து உள்ளதும் நீதிமன்றத்திற்கு வெளிப்படுகின்றது.

மேலும் 4 தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியதால் இதில் ஏட்டப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகும்.

ஆகவே நிமல் புஞ்சிவேவா, எஸ்.பி.டிவிறட்ன, எம்.எம்.மொகமட், கே.பி.பி.பதிரன, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் சட்டக் கோவைக்கு முரனாக அடிப்படை சட்டத்தை மீறி உரிய திட்டமிடல் இன்றியும் முறையான வழியில் அதிகாரத்தை பயன்படுத்தாமலும் தவறிழைத்துள்ளனர் என்ற முடிவை இந்த நீதிமன்றம் எட்டுகிறது.

மேலும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வேன்டுமென்றே நீதி மன்றை தவறாக தனது சத்திய கூற்றின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் தெளிவாகிறது என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பி.எஸ்.எம் சாள்ஸ் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிப்படுத்தியுள்ளார்- உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவராக இருந்த பி.எஸ்.எம் சாள்ஸ்  உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கிய சத்தியக் கூற்றின்  மூலம் உச்ச நீதிமன்றத்தை  தவறாக வழிநடத்தியமை தெளிவாவதாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறுத்தப்பட்ட மைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கில் தீர்ப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நவம்பர் 2022 தொடக்கம் கடந்த ஆண்டு முதலாம் மாதம் 26 ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்தவராக கடமையாற்றிய காலப்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமான கூட்டம் எதிலும் பங்குபற்றவில்லை எனவும் எனவே தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களே உள்ளூராட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்க் கொண்டு இருந்தார்கள்.எனவே அவர்கள் எடுத்த தீர்மானங்கள் முறையற்றது என பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.எனினும் நடந்த 5 கூட்டத்தில் இரண்டிற்கு சாள்ஸ் சென்றுள்ளதும் மூன்றினை தவிர்த்து உள்ளதும் நீதிமன்றத்திற்கு வெளிப்படுகின்றது.மேலும் 4 தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியதால் இதில் ஏட்டப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகும்.ஆகவே நிமல் புஞ்சிவேவா, எஸ்.பி.டிவிறட்ன, எம்.எம்.மொகமட், கே.பி.பி.பதிரன, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் சட்டக் கோவைக்கு முரனாக அடிப்படை சட்டத்தை மீறி உரிய திட்டமிடல் இன்றியும் முறையான வழியில் அதிகாரத்தை பயன்படுத்தாமலும் தவறிழைத்துள்ளனர் என்ற முடிவை இந்த நீதிமன்றம் எட்டுகிறது.மேலும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வேன்டுமென்றே நீதி மன்றை தவறாக தனது சத்திய கூற்றின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் தெளிவாகிறது என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement