எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விவாதத்தை மக்கள் பார்வையிடும் வகையில் அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக மாற்றப்பட வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விவாதத்தை நடத்துவதில் இரு தரப்புக்கும் விருப்பமில்லை என அமைச்சர் தெரிவித்தார்
இதன்படி ஏனைய இரண்டு பிரதான வேட்பாளர்களையும் இரு தரப்பிலும் விவாதம் நடத்துமாறு கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விவாதத்தில் இரு தரப்புக்கும் மறைமுகமான தன்மை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவாதம் நடைபெறும் நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் இலங்கை மக்கள் விவாதத்தை பார்வையிட முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சஜித் மற்றும் அனுரவின் விவாதத்திற்காக பொது விடுமுறை அமைச்சர் தகவல். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விவாதத்தை மக்கள் பார்வையிடும் வகையில் அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக மாற்றப்பட வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், விவாதத்தை நடத்துவதில் இரு தரப்புக்கும் விருப்பமில்லை என அமைச்சர் தெரிவித்தார்இதன்படி ஏனைய இரண்டு பிரதான வேட்பாளர்களையும் இரு தரப்பிலும் விவாதம் நடத்துமாறு கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த விவாதத்தில் இரு தரப்புக்கும் மறைமுகமான தன்மை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் விவாதம் நடைபெறும் நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் இலங்கை மக்கள் விவாதத்தை பார்வையிட முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.