• Mar 28 2026

பிரதேச சபை உறுப்பினரின் மக்கள் பணி தடை – அதிகாரிக்கு எதிராக கண்டனத் தீர்மானம்!

shanu / Mar 27th 2026, 10:41 am
image

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் கடந்த 24.03.2026 அன்று நடைபெற்றது. இதில், பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் முன்வைத்த பிரேரணையின் பேரில் முக்கியமான கண்டனத் தீர்மானம் ஒன்றை சபை ஏகமனதாக நிறைவேற்றியது.


அந்தப் பிரேரணையில், அரச சுற்று நிருபம் 12/2021 இன் படி கடமை விடுமுறை பெற்று மக்கள் பணிகளில் ஈடுபடுவதற்கான தனது ஜனநாயக உரிமையை முல்லைத்தீவு மாவட்ட நில அளவை திணைக்களத்தின் சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் பல்வேறு முறைகளில் தடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.


இது தொடர்பாக, உறுப்பினர் தவராசா அமலன், நில அளவையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் அனுமதி கோரி விண்ணப்பித்ததுடன், அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் குறித்த அதிகாரி தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், இத்தகைய செயல்கள் ஜனநாயக சோசலிசக் குடியரசில் ஜனநாயகத்திற்கு எதிரான பாரிய சவாலும் அச்சுறுத்தலுமாகும் எனவும் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகரின் செயல்களை கண்டித்து சபை ஏகமனதாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.


மேலும், இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி, காணி அமைச்சர், உள்ளூராட்சி அமைச்சர், நில அளவையாளர் நாயகம், வடக்கு மாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினரின் மக்கள் பணி தடை – அதிகாரிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் கடந்த 24.03.2026 அன்று நடைபெற்றது. இதில், பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் முன்வைத்த பிரேரணையின் பேரில் முக்கியமான கண்டனத் தீர்மானம் ஒன்றை சபை ஏகமனதாக நிறைவேற்றியது.அந்தப் பிரேரணையில், அரச சுற்று நிருபம் 12/2021 இன் படி கடமை விடுமுறை பெற்று மக்கள் பணிகளில் ஈடுபடுவதற்கான தனது ஜனநாயக உரிமையை முல்லைத்தீவு மாவட்ட நில அளவை திணைக்களத்தின் சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் பல்வேறு முறைகளில் தடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இது தொடர்பாக, உறுப்பினர் தவராசா அமலன், நில அளவையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் அனுமதி கோரி விண்ணப்பித்ததுடன், அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் குறித்த அதிகாரி தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், இத்தகைய செயல்கள் ஜனநாயக சோசலிசக் குடியரசில் ஜனநாயகத்திற்கு எதிரான பாரிய சவாலும் அச்சுறுத்தலுமாகும் எனவும் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, குறித்த சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகரின் செயல்களை கண்டித்து சபை ஏகமனதாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.மேலும், இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி, காணி அமைச்சர், உள்ளூராட்சி அமைச்சர், நில அளவையாளர் நாயகம், வடக்கு மாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement