• Oct 06 2024

அரச சேவை சங்கங்களின் சுகயீன விடுமுறை தொடர்பான அறிவித்தல்...!

Anaath / Jul 7th 2024, 7:37 pm
image

Advertisement

200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09)  சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளது. 

அவற்றில் கிராம சேவகர் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

அத்துடன் நாலா மறுதினம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிப்பதில்லை என தெரிவித்துள்ளனர். 

அத்துடன் அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச சேவை சங்கங்களின் சுகயீன விடுமுறை தொடர்பான அறிவித்தல். 200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09)  சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளது. அவற்றில் கிராம சேவகர் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் நாலா மறுதினம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிப்பதில்லை என தெரிவித்துள்ளனர். அத்துடன் அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement