வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, தனது புதுப்பிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணியகங்களுக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொது இணையத்தளத்தையும், நேற்று(18) அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவ நிகழ்வில் தொடங்கி வைத்தது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர், சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், இணையவழியாக இணைந்திருந்த வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்கள், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்பப் பங்காளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன், புதிய இடைமுகத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட இணையத்தளத்தைத் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹேரத்,
டிஜிட்டல் மாற்றம் என்பது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல, அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு உயர் பயனுறுதிப்பாடு, அணுகல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் சேவை செய்யும் முறையை மேம்படுத்துவதாகும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்தப் புதிய தளம், குடிமக்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகங்கள், வெளிநாட்டுப் பங்காளிகள், முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோருடன் இலங்கையின் டிஜிட்டல்சார் ஈடுபாட்டை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை தூதரகங்களுக்காக பொது இணையதளம் அறிமுகம் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, தனது புதுப்பிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணியகங்களுக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொது இணையத்தளத்தையும், நேற்று(18) அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவ நிகழ்வில் தொடங்கி வைத்தது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர், சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், இணையவழியாக இணைந்திருந்த வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்கள், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்பப் பங்காளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன், புதிய இடைமுகத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட இணையத்தளத்தைத் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹேரத், டிஜிட்டல் மாற்றம் என்பது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல, அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு உயர் பயனுறுதிப்பாடு, அணுகல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் சேவை செய்யும் முறையை மேம்படுத்துவதாகும் என்று வலியுறுத்தினார். மேலும், இந்தப் புதிய தளம், குடிமக்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகங்கள், வெளிநாட்டுப் பங்காளிகள், முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோருடன் இலங்கையின் டிஜிட்டல்சார் ஈடுபாட்டை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.