புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பரிசோதனை நிகழ்வும் அணிவகுப்பும் இன்று (20) காலை நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்ணவீர எல். அடசூரிய நிகழ்வில் கலந்து கொண்டு பொலிஸாரின் உடை ஒழுங்கு, உபகரணங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு பரிசோதித்தார்.
மேலும் பொலிஸ் நிலைய வளாகம் மற்றும் இருப்பிடங்களின் நிலையும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது பொலிஸாரால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுடன், அதனை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, பொலிஸாரின் உடமைகள் மற்றும் சேவைக்கான வாகனங்களும் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.
இந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குணசேகர உள்ளிட்ட பொலிஸார் கலந்துகொண்டிருந்தனர்.
பொலிஸ் துறையின் ஒழுங்கு, ஒத்துழைப்பு மற்றும் சேவைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய பரிசோதனைகள் காலா காலமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பரிசோதனை நிகழ்வும் அணிவகுப்பும் இன்று (20) காலை நடைபெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்ணவீர எல். அடசூரிய நிகழ்வில் கலந்து கொண்டு பொலிஸாரின் உடை ஒழுங்கு, உபகரணங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு பரிசோதித்தார். மேலும் பொலிஸ் நிலைய வளாகம் மற்றும் இருப்பிடங்களின் நிலையும் ஆய்வு செய்யப்பட்டது.இந்நிகழ்வின் போது பொலிஸாரால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுடன், அதனை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து, பொலிஸாரின் உடமைகள் மற்றும் சேவைக்கான வாகனங்களும் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.இந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு நிகழ்வில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குணசேகர உள்ளிட்ட பொலிஸார் கலந்துகொண்டிருந்தனர்.பொலிஸ் துறையின் ஒழுங்கு, ஒத்துழைப்பு மற்றும் சேவைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய பரிசோதனைகள் காலா காலமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.