புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழா நாளை சனிக்கிழமை (18) மிகவும் பிரமாண்டமாக 40 ஊர்திகளுடன் பவனி வந்து பல கலை, பண்பாடுகளுடன் நிகழ்வுகள் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.
குறித்த நிகழ்வு தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் தலைவரும் , ஓய்வு நிலை பிரதிகல்விப்பணிப்பாளருமான பொன்.பேரின்பநாயகம் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையானது பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் கலை பண்பாடு தொடர்பாகவும், பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. வருடாவருடம் மேம்பாட்டு பேரவையானது கலைபண்பாட்டு விழா நடாத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடந்தவருடமும் கலைபண்பாட்டு விழாவினை நடாத்தியிருந்தோம்.
இவ்வருடம் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து கலைபண்பாட்டு விழாவினை நடாத்துகின்றது.
அந்தவகையில் முன் நிகழ்வாக காத்தவராயன் கூத்து, பாடசாலை பிள்ளைகளுக்கான கிராமிய ஆக்கம்,நடனம் போன்ற போட்டிகளை நடாத்தி இருக்கின்றோம். அதில் முதலிடங்களை பெற்றவர்களுக்கு கலைபண்பாட்டு விழாவில் பரிசில்கள் வழங்கப்படுவதோடு மேடையேற்றப்பட இருக்கின்றது.
இக் கலை விழாவில் 40 ஊர்திகள் பங்குபெற இருக்கின்றது. இதில் கோலாட்டம், கும்மி , கரகம் குடம்முதல் போன்ற கலைகள் காண்பிக்கப்படுவதோடு அரங்க நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றது.
கலைகள் அருகிவரும் நிலையில் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரும் பங்குகொண்டு விழாவை சிறப்பிப்பதோடு எதிர்காலத்தில் கலை பண்பாடு வளர ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்திருந்தார்.
குறித்த பண்பாட்டு விழா தொடர்பில் புதுக்குடியிருப்பு பண்பாட்டு பேரவையின் ஆலோசகரும், ஓய்வு நிலை பிரதிகல்விப்பணிப்பாளருமான ச.நாகரட்ணம் கருத்து தெரிவிக்கையில்,
மனித வாழ்விலே பண்பாடு, விழுமியம், கலாச்சாரம் வாழ்வியல் என்பன மிக முக்கியமான கருதுகோளாக இருக்கின்றன.
புராதன காலத்தில் இருந்து இன்றுவரை மனித , வாழ்வு ,உணர்வு, பண்பாடுகளிலே பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டுவந்தாலும் பழையகால நம்பிக்கைகள் கடைப்பிடித்து வருவதை அவதனிக்க முடிகின்றது.
வேட்டையாடி இறைச்சிகளை உண்டு காடுகளிலே வாழ்ந்த மக்கள் படிப்படியான நாகரிக வளர்ச்சியில் முன்னேற்றமடைந்து இன்று தொழில் முறையியல் வளர்ச்சி காரணமாக செவ்வாய் கிரகத்திலே வாழ தகுந்தவர்களாக ஆக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற இந்த வேளையில்கூட எமது புராதன பண்பாடு கலாச்சாரம் விழுமியங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வருவது மிக முக்கியமானதாகும்.
உலக ஒழுங்கு, நாகரீக வளர்ச்சியிலும் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை அவனது வாழ்வாதாரங்களோடு தொழில் முறையியலோடு இந்த பண்பாட்டு விழுமியங்களும் பேணப்பட்டு வருகின்றது. விவசாயத்தையோ, தோட்ட வேலைகளையோ, வேட்டையாடலயோ, கால்நடைகளையோ செய்துவந்த மக்கள் தமது தொழில்கள் முடிவுற்ற இடைக்காலங்களிலே அந்த கிராம மக்கள் சமூகமாக ஒன்றுசேர்ந்து பல்வேறுபட்ட நாடகங்கள் , கூத்துக்கள், விளையாட்டுக்கள் இன்னும் பல்வேறுபட்ட இசைநிகழ்ச்சிகளில் பங்குகொண்டதை நாம் வரலாறு எமக்கு சொல்லிதந்திருக்கின்றது.
எனவே இவ் அடிப்படை கருது கோள்களை அடிப்படையாக கொண்டு இலங்கையில் பிரதேச செயலகங்கள் தோறும் வருடாவருடம் கலை பண்பாட்டு பெருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் புதுக்குடியிருப்பிலும் இவ்வருடம் புதிய பிரதேசசெயலாளர் வருகையோடும்,புதிய கலாசார உத்தியாகத்தர் அனுசரணையோடும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினரும் இணைந்து இவ்வேலைதிட்டங்களில் பங்கெடுத்து வருகின்றோம்.
இப்பிரதேசத்தில் வாழ்கி்ற மக்கள் நல்லவர்களாக , பண்பாடுள்ளவர்களாக, காலாசாரத்தையும் விழுமியத்தையும், பேணி பாதுகாக்க கூடியவர்களாக தற்காலத்திலே சவாலாக இருக்கும் எதிர்வினை பொருள்களுக்கு அடிபணியாது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் இவ்வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம் என்றார்.
40 ஊர்தி பவனிகளுடன் புதுக்குடியிருப்பு பண்பாட்டு பெருவிழா - மேம்பாட்டு பேரவையால் அழைப்பு விடுப்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழா நாளை சனிக்கிழமை (18) மிகவும் பிரமாண்டமாக 40 ஊர்திகளுடன் பவனி வந்து பல கலை, பண்பாடுகளுடன் நிகழ்வுகள் சிறப்பிக்கப்பட இருக்கின்றது. குறித்த நிகழ்வு தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் தலைவரும் , ஓய்வு நிலை பிரதிகல்விப்பணிப்பாளருமான பொன்.பேரின்பநாயகம் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையானது பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் கலை பண்பாடு தொடர்பாகவும், பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. வருடாவருடம் மேம்பாட்டு பேரவையானது கலைபண்பாட்டு விழா நடாத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடந்தவருடமும் கலைபண்பாட்டு விழாவினை நடாத்தியிருந்தோம். இவ்வருடம் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து கலைபண்பாட்டு விழாவினை நடாத்துகின்றது.அந்தவகையில் முன் நிகழ்வாக காத்தவராயன் கூத்து, பாடசாலை பிள்ளைகளுக்கான கிராமிய ஆக்கம்,நடனம் போன்ற போட்டிகளை நடாத்தி இருக்கின்றோம். அதில் முதலிடங்களை பெற்றவர்களுக்கு கலைபண்பாட்டு விழாவில் பரிசில்கள் வழங்கப்படுவதோடு மேடையேற்றப்பட இருக்கின்றது.இக் கலை விழாவில் 40 ஊர்திகள் பங்குபெற இருக்கின்றது. இதில் கோலாட்டம், கும்மி , கரகம் குடம்முதல் போன்ற கலைகள் காண்பிக்கப்படுவதோடு அரங்க நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றது. கலைகள் அருகிவரும் நிலையில் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரும் பங்குகொண்டு விழாவை சிறப்பிப்பதோடு எதிர்காலத்தில் கலை பண்பாடு வளர ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்திருந்தார்.குறித்த பண்பாட்டு விழா தொடர்பில் புதுக்குடியிருப்பு பண்பாட்டு பேரவையின் ஆலோசகரும், ஓய்வு நிலை பிரதிகல்விப்பணிப்பாளருமான ச.நாகரட்ணம் கருத்து தெரிவிக்கையில்,மனித வாழ்விலே பண்பாடு, விழுமியம், கலாச்சாரம் வாழ்வியல் என்பன மிக முக்கியமான கருதுகோளாக இருக்கின்றன. புராதன காலத்தில் இருந்து இன்றுவரை மனித , வாழ்வு ,உணர்வு, பண்பாடுகளிலே பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டுவந்தாலும் பழையகால நம்பிக்கைகள் கடைப்பிடித்து வருவதை அவதனிக்க முடிகின்றது.வேட்டையாடி இறைச்சிகளை உண்டு காடுகளிலே வாழ்ந்த மக்கள் படிப்படியான நாகரிக வளர்ச்சியில் முன்னேற்றமடைந்து இன்று தொழில் முறையியல் வளர்ச்சி காரணமாக செவ்வாய் கிரகத்திலே வாழ தகுந்தவர்களாக ஆக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற இந்த வேளையில்கூட எமது புராதன பண்பாடு கலாச்சாரம் விழுமியங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வருவது மிக முக்கியமானதாகும்.உலக ஒழுங்கு, நாகரீக வளர்ச்சியிலும் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை அவனது வாழ்வாதாரங்களோடு தொழில் முறையியலோடு இந்த பண்பாட்டு விழுமியங்களும் பேணப்பட்டு வருகின்றது. விவசாயத்தையோ, தோட்ட வேலைகளையோ, வேட்டையாடலயோ, கால்நடைகளையோ செய்துவந்த மக்கள் தமது தொழில்கள் முடிவுற்ற இடைக்காலங்களிலே அந்த கிராம மக்கள் சமூகமாக ஒன்றுசேர்ந்து பல்வேறுபட்ட நாடகங்கள் , கூத்துக்கள், விளையாட்டுக்கள் இன்னும் பல்வேறுபட்ட இசைநிகழ்ச்சிகளில் பங்குகொண்டதை நாம் வரலாறு எமக்கு சொல்லிதந்திருக்கின்றது.எனவே இவ் அடிப்படை கருது கோள்களை அடிப்படையாக கொண்டு இலங்கையில் பிரதேச செயலகங்கள் தோறும் வருடாவருடம் கலை பண்பாட்டு பெருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் புதுக்குடியிருப்பிலும் இவ்வருடம் புதிய பிரதேசசெயலாளர் வருகையோடும்,புதிய கலாசார உத்தியாகத்தர் அனுசரணையோடும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினரும் இணைந்து இவ்வேலைதிட்டங்களில் பங்கெடுத்து வருகின்றோம்.இப்பிரதேசத்தில் வாழ்கி்ற மக்கள் நல்லவர்களாக , பண்பாடுள்ளவர்களாக, காலாசாரத்தையும் விழுமியத்தையும், பேணி பாதுகாக்க கூடியவர்களாக தற்காலத்திலே சவாலாக இருக்கும் எதிர்வினை பொருள்களுக்கு அடிபணியாது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் இவ்வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம் என்றார்.