• Oct 20 2024

ரஷ்யா-அமெரிக்க உறவுகள் நெருக்கடியில் இருப்பதாக புட்டின் தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Apr 6th 2023, 1:23 pm
image

Advertisement

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டு  வருகின்றன என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்  புட்டின் தெரிவித்துள்ளார். 

நவீன உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறைகளில் இந்த நெருக்கடி வேரூன்றியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகப் பாதுகாப்பு என்பது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் வலுவாக தங்கியுள்ளது என்றும், உக்ரேனிய நெருக்கடி மற்றும் ரஷ்யாவுடனான இருதரப்பு உறவுகளின் சரிவு ஆகிய இரண்டிற்கும் இறுதியில் அமெரிக்காவே பொறுப்பு என்றும்  புட்டின் குறிப்பிட்டார்.

சமத்துவம், இறையாண்மைக்கு மதிப்பளித்தல், உள்விவகாரங்களில் தலையிடாதது போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் உறவுகளை உருவாக்குவதற்கு ரஷ்யா ஆதரவாக நிற்கிறது என்று  புட்டின் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ரஷ்யாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா-அமெரிக்க உறவுகள் நெருக்கடியில் இருப்பதாக புட்டின் தெரிவிப்பு samugammedia ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டு  வருகின்றன என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்  புட்டின் தெரிவித்துள்ளார். நவீன உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறைகளில் இந்த நெருக்கடி வேரூன்றியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.உலகப் பாதுகாப்பு என்பது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் வலுவாக தங்கியுள்ளது என்றும், உக்ரேனிய நெருக்கடி மற்றும் ரஷ்யாவுடனான இருதரப்பு உறவுகளின் சரிவு ஆகிய இரண்டிற்கும் இறுதியில் அமெரிக்காவே பொறுப்பு என்றும்  புட்டின் குறிப்பிட்டார்.சமத்துவம், இறையாண்மைக்கு மதிப்பளித்தல், உள்விவகாரங்களில் தலையிடாதது போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் உறவுகளை உருவாக்குவதற்கு ரஷ்யா ஆதரவாக நிற்கிறது என்று  புட்டின் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்துடனான ரஷ்யாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement