கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் வருடாந்த வர்த்தக கண்காட்சி இன்று(14) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும், கிண்ணியா பிரதேச சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, இந்தக் கண்காட்சியை பிரதேச செயலாளர் எம் எச் எம். ஹனி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்தக் கண்காட்சி வாராந்தம், மாதாந்தம் மற்றும் வருடாந்தம் நடைபெறுவதாகவும், இன்றைய கண்காட்சி 2024ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த கண்காட்சி எனவும் இதன் போது, உரையாற்றுகையில், பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
உள்ளூர் உற்பத்தியை சந்தைப்படுத்தி, தொழில் முயற்சியளர்களை ஊக்குவிப்பதும், அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுமே இந்த கண்காட்சியின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப், மற்றும் பிரதேச சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கிண்ணியாவில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் வருடாந்த வர்த்தக கண்காட்சி. கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் வருடாந்த வர்த்தக கண்காட்சி இன்று(14) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும், கிண்ணியா பிரதேச சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, இந்தக் கண்காட்சியை பிரதேச செயலாளர் எம் எச் எம். ஹனி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந்தக் கண்காட்சி வாராந்தம், மாதாந்தம் மற்றும் வருடாந்தம் நடைபெறுவதாகவும், இன்றைய கண்காட்சி 2024ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த கண்காட்சி எனவும் இதன் போது, உரையாற்றுகையில், பிரதேச செயலாளர் தெரிவித்தார்.உள்ளூர் உற்பத்தியை சந்தைப்படுத்தி, தொழில் முயற்சியளர்களை ஊக்குவிப்பதும், அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுமே இந்த கண்காட்சியின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்த நிகழ்வில், பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப், மற்றும் பிரதேச சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.