பண்டாரவளைக்கும் ஹீலோயாவுக்கும் இடையிலான ரயில் பாதையில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இதனால் கொழும்பு - பதுளை பிரதான பாதையில் செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பதிகாரி தம்மிக்க ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதம் இன்று காலை பதுளை மற்றும் ஹாலிஎல நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது. ரயில் மற்றும் பாதையை சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மலையக பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்வதால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இதனால் மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானமாக வாகங்களை செலுத்துமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
மண்மேடு சரிந்ததால் மலையகத்தில் ரயில் சேவைகள் தடை.samugammedia பண்டாரவளைக்கும் ஹீலோயாவுக்கும் இடையிலான ரயில் பாதையில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.இதனால் கொழும்பு - பதுளை பிரதான பாதையில் செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பதிகாரி தம்மிக்க ஹேரத் தெரிவித்தார்.இதேவேளை, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதம் இன்று காலை பதுளை மற்றும் ஹாலிஎல நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது. ரயில் மற்றும் பாதையை சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.மலையக பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்வதால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இதனால் மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானமாக வாகங்களை செலுத்துமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.