• Apr 02 2025

மீண்டும் தொடர் வேலை நிறுத்தம் - ரயில் நிலைய அதிபர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Jul 15th 2024, 9:16 am
image


தமது கோரிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பித்து தீர்வுகளை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமது சங்கம் நாளை (16) கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இதேவேளை,  பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் இன்று (15) முதல் பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.


மீண்டும் தொடர் வேலை நிறுத்தம் - ரயில் நிலைய அதிபர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை தமது கோரிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பித்து தீர்வுகளை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமது சங்கம் நாளை (16) கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.இதேவேளை,  பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் இன்று (15) முதல் பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளனர்.தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement