• Feb 11 2025

வைத்தியர் அர்ச்சுனாவை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக திரண்ட மக்கள்...! பொலிஸார் அச்சுறுத்தல்

Sharmi / Jul 15th 2024, 9:28 am
image

வடக்கு மருத்துவத் துறையில் இடம்பெற்றுவரும்  பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா  கடந்த வாரம் விடுப்பில் (leave) கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம்(13) மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ளார்.

இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா  வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை விரட்டியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


வைத்தியர் அர்ச்சுனாவை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக திரண்ட மக்கள். பொலிஸார் அச்சுறுத்தல் வடக்கு மருத்துவத் துறையில் இடம்பெற்றுவரும்  பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா  கடந்த வாரம் விடுப்பில் (leave) கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம்(13) மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ளார்.இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா  வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர்.இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை விரட்டியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement