• Sep 17 2024

வடக்கில் இன்று முதல் மழை - மக்களே அவதானம்

harsha / Dec 1st 2022, 11:27 am
image

Advertisement

வடகீழ்  பருவக்காற்று வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுகளும் இணைந்து இருப்பதன் காரணமாக இன்று முதல் 4 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

 இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா  தெரிவித்துள்ளார்.

  இவ்வாண்டு இதுவரை 4 தாழ் அமுக்கங்கள்  வங்காளவிரிகுடாவில் உருவாயின .எனினும் ஒரு தாழமுக்கம் மட்டுமே எமக்கு மழையைத் தந்துள்ளது.

 ஒரு தாழமுக்கம் வடக்கு நோக்கி நகர்ந்ததால் எமக்கு எத்தகைய பயனையும் தரவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு விவசாய நிலங்கள் நீர் பாசன இடங்கள் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் ஆற்றல் பருவக்காற்றால் கிடைக்கும் மழை வீழ்ச்சிக்கு உண்டு.ஆகவே மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்வோர் சரியான மழை கிடைக்காமையால் யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எமக்கு ஒரு பெருமழை அவசியம்.மழை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.எனினும் பல்வேறு காரணங்களால் வளிமண்டல நிலைமைகள் மாறாலம் என்றார்.

வடக்கில் இன்று முதல் மழை - மக்களே அவதானம் வடகீழ்  பருவக்காற்று வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுகளும் இணைந்து இருப்பதன் காரணமாக இன்று முதல் 4 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா  தெரிவித்துள்ளார்.   இவ்வாண்டு இதுவரை 4 தாழ் அமுக்கங்கள்  வங்காளவிரிகுடாவில் உருவாயின .எனினும் ஒரு தாழமுக்கம் மட்டுமே எமக்கு மழையைத் தந்துள்ளது. ஒரு தாழமுக்கம் வடக்கு நோக்கி நகர்ந்ததால் எமக்கு எத்தகைய பயனையும் தரவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு விவசாய நிலங்கள் நீர் பாசன இடங்கள் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் ஆற்றல் பருவக்காற்றால் கிடைக்கும் மழை வீழ்ச்சிக்கு உண்டு.ஆகவே மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்வோர் சரியான மழை கிடைக்காமையால் யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் எமக்கு ஒரு பெருமழை அவசியம்.மழை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.எனினும் பல்வேறு காரணங்களால் வளிமண்டல நிலைமைகள் மாறாலம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement