• Nov 11 2024

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு பேரணி...!

Anaath / Jun 2nd 2024, 5:59 pm
image

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு  கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் இணைந்து கொண்டாடும்  சர்வதேச சைக்கிளோட்ட தின பேரணி  மருதமுனை பரகத் டெக்ஸ் முன்றலில் ஒன்றுகூடி கல்முனை நகர்வரை சென்று மீண்டும் மருதமுனை கடற்கரை பகுதியில் உள்ள வெளிச்சவீடு அருகில் நிறைவடைந்துள்ளது.

 இன்றையதினம்  (2) ரைடர்ஸ் ஹப் சைக்கிளோட்ட கழகத்தால் கொண்டாடப்படவுள்ள சர்வதேச சைக்கிளோட்ட தின பேரணியில் அதிகளவான மக்கள்  தத்தமது  சைக்கிள்களுடன் வந்து கலந்து சிறப்பித்தனர். இதன் போது   அனைத்து கழகங்கள், சமூக சிவில் சேவை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், பாடசாலை சமூகங்கள், பொதுமக்கள் என பலரும் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சைக்கிள் ஓட்டங்களில் கடந்த காலங்களில் சாதனை செய்தவர்கள்  பிரதம அதிதியாக இப்பேரணியில் பங்கேற்ற கல்முனை பிரதேச செயலாளர் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி உள்ளிட்டோரால் கௌரவிக்கப்பட்டனர். 

சைக்கிள் ஓட்டுதலைக் கொண்டாடுவோம் ,சைக்கிள் பாவனையை ஊக்குவித்தலால் ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குவதோடு மாசற்ற சுற்றுச் சூழலை எதிர்கால சந்ததியிருக்கு விட்டுச்செல்லும் முன்னோடிகளாவோம். ஆரோக்கியமான காபன் அற்ற பசுமையான பூமி கிரகத்தின் உருவாக்கத்தில் பங்காளிகளாவோம்  என வலியுறுத்தி  இறுதியில் ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டு  இறுதியில் ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டு   ரைடர்ஸ் ஹப் சைக்கிளோட்ட கழக consultant சர்வதேச தொண்டு நிறுவன  தலைவர் கலீல் கபூர் ,  பிரதித் தலைவர் வைத்தியர் ஏ.ஆர்.எம். அஸ்மி, வைத்தியர் ஏ.எஸ். பௌசாட்  , நெல்லியடி காப்புறுதி நிறுவன பிராந்திய முகாமையாளர் துரை கோபிநாத்    அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ  மலீக்  , பிரதி செயலாளரும் சிரேஷ்ட பொது சுதாதார பொறுப்பதிகாரியுமான  எம்.என்.எம்.பைலான் பங்குபற்றலுடன் சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு பேரணி. உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு  கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் இணைந்து கொண்டாடும்  சர்வதேச சைக்கிளோட்ட தின பேரணி  மருதமுனை பரகத் டெக்ஸ் முன்றலில் ஒன்றுகூடி கல்முனை நகர்வரை சென்று மீண்டும் மருதமுனை கடற்கரை பகுதியில் உள்ள வெளிச்சவீடு அருகில் நிறைவடைந்துள்ளது. இன்றையதினம்  (2) ரைடர்ஸ் ஹப் சைக்கிளோட்ட கழகத்தால் கொண்டாடப்படவுள்ள சர்வதேச சைக்கிளோட்ட தின பேரணியில் அதிகளவான மக்கள்  தத்தமது  சைக்கிள்களுடன் வந்து கலந்து சிறப்பித்தனர். இதன் போது   அனைத்து கழகங்கள், சமூக சிவில் சேவை அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், பாடசாலை சமூகங்கள், பொதுமக்கள் என பலரும் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.மேலும் சைக்கிள் ஓட்டங்களில் கடந்த காலங்களில் சாதனை செய்தவர்கள்  பிரதம அதிதியாக இப்பேரணியில் பங்கேற்ற கல்முனை பிரதேச செயலாளர் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி உள்ளிட்டோரால் கௌரவிக்கப்பட்டனர். சைக்கிள் ஓட்டுதலைக் கொண்டாடுவோம் ,சைக்கிள் பாவனையை ஊக்குவித்தலால் ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குவதோடு மாசற்ற சுற்றுச் சூழலை எதிர்கால சந்ததியிருக்கு விட்டுச்செல்லும் முன்னோடிகளாவோம். ஆரோக்கியமான காபன் அற்ற பசுமையான பூமி கிரகத்தின் உருவாக்கத்தில் பங்காளிகளாவோம்  என வலியுறுத்தி  இறுதியில் ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டு  இறுதியில் ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டு   ரைடர்ஸ் ஹப் சைக்கிளோட்ட கழக consultant சர்வதேச தொண்டு நிறுவன  தலைவர் கலீல் கபூர் ,  பிரதித் தலைவர் வைத்தியர் ஏ.ஆர்.எம். அஸ்மி, வைத்தியர் ஏ.எஸ். பௌசாட்  , நெல்லியடி காப்புறுதி நிறுவன பிராந்திய முகாமையாளர் துரை கோபிநாத்    அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ  மலீக்  , பிரதி செயலாளரும் சிரேஷ்ட பொது சுதாதார பொறுப்பதிகாரியுமான  எம்.என்.எம்.பைலான் பங்குபற்றலுடன் சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement