• May 13 2026

இராமநாதபுரம் பொலிஸாரின் அதிரடிச் சுற்றிவளைப்பு; பெட்ரோல், டீசலை பதுக்கியவர் கைது

Chithra / Mar 22nd 2026, 8:57 am
image

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவர் பதுக்கி வைத்திருந்த 1220 லிட்டர் பெட்ரோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளது.


பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார், குறித்த எரிபொருளை பறிமுதல் செய்துள்ளதுடன் குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.


இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 247 லீட்டர் டீசலும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் பொலிஸாரின் அதிரடிச் சுற்றிவளைப்பு; பெட்ரோல், டீசலை பதுக்கியவர் கைது கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவர் பதுக்கி வைத்திருந்த 1220 லிட்டர் பெட்ரோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளது.பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிஸார், குறித்த எரிபொருளை பறிமுதல் செய்துள்ளதுடன் குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 247 லீட்டர் டீசலும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement