• Sep 20 2024

கடற்படையினரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு- சாலை மறியலில் குதித்த இராமேஸ்வரம் மீனவர்கள்..!

Sharmi / Aug 1st 2024, 2:34 pm
image

Advertisement

இலங்கை கடற்படையினரின்  ரோந்து படகு மோதி  இராமேஸ்வரம் மீனவர்கள் உயிராபத்தை எதிர்நோக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் துறைமுக பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் மீன்பிடி விசைப் படகு நடுக்கடலில் மூழ்கியதுடன் அதில் பயணித்த நான்கு மீனவர்களும் கடலில் விழுந்து மாயமாகியுள்ளனர்.

இதனையடுத்து மாயமான மீனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மற்றைய இரண்டு மீனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட போது ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சடலம் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதேவேளை, மேலும் ஒரு மீனவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  இலங்கை கடற்படையின் செயற்பாட்டை கண்டித்தும், இதுபோன்ற சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், தற்போது மீனவர்களின் உறவினர்கள் துறைமுக பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் அப்பகுதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் , அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.



 


கடற்படையினரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு- சாலை மறியலில் குதித்த இராமேஸ்வரம் மீனவர்கள். இலங்கை கடற்படையினரின்  ரோந்து படகு மோதி  இராமேஸ்வரம் மீனவர்கள் உயிராபத்தை எதிர்நோக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் துறைமுக பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் மீன்பிடி விசைப் படகு நடுக்கடலில் மூழ்கியதுடன் அதில் பயணித்த நான்கு மீனவர்களும் கடலில் விழுந்து மாயமாகியுள்ளனர்.இதனையடுத்து மாயமான மீனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மற்றைய இரண்டு மீனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட போது ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சடலம் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.அதேவேளை, மேலும் ஒரு மீனவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்,  இலங்கை கடற்படையின் செயற்பாட்டை கண்டித்தும், இதுபோன்ற சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், தற்போது மீனவர்களின் உறவினர்கள் துறைமுக பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் , அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement