• Nov 25 2024

ரணில் - அநுர ஜோடியா? சஜித்தா? வெற்றியாளர் யார் என்பதை சிந்தித்துத் தீர்மானியுங்கள்- எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்!

Tamil nila / Sep 11th 2024, 6:28 pm
image

"தற்போது நாட்டு மக்களுக்குத் தெளிவான தீர்மானம் ஒன்று இருக்கும். ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஜோடிக்குப் புள்ளடி இடுவதா அல்லது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா என்று தீர்மானிக்க வேண்டும்."


- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 44 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் குளியாபிட்டி நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்த நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்து, மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படாத ஒரு யுகத்தில் இருக்கின்றோம். குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மந்த போசனை அதிகரிக்கின்ற இந்த யுகத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, விருத்தியடையச் செய்வதற்கான யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

இந்த இளைஞர் சமூகத்துக்காக பத்து இலட்சம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வறுமையைப் போக்குகின்ற நோக்கில் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா விதம் 24 மாதங்களுக்கான நிவாரணத்தை வழங்குவோம்." - என்றார்.



ரணில் - அநுர ஜோடியா சஜித்தா வெற்றியாளர் யார் என்பதை சிந்தித்துத் தீர்மானியுங்கள்- எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் "தற்போது நாட்டு மக்களுக்குத் தெளிவான தீர்மானம் ஒன்று இருக்கும். ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஜோடிக்குப் புள்ளடி இடுவதா அல்லது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா என்று தீர்மானிக்க வேண்டும்."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 44 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் குளியாபிட்டி நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"இந்த நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்து, மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படாத ஒரு யுகத்தில் இருக்கின்றோம். குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மந்த போசனை அதிகரிக்கின்ற இந்த யுகத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, விருத்தியடையச் செய்வதற்கான யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.இந்த இளைஞர் சமூகத்துக்காக பத்து இலட்சம் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வறுமையைப் போக்குகின்ற நோக்கில் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா விதம் 24 மாதங்களுக்கான நிவாரணத்தை வழங்குவோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement