இலங்கையில் நடைபெற்ற அரக்கல போராட்டம் பொருளாதார நெருக்கடியின் வெளிபாடாக அரசியல் நெருக்கடியின் வெளிப்பாடாக நாங்கள் எல்லோரும் அறிந்துள்ளோம். ஆனால் அந்த மக்கள் எதிர்பார்த்த தீர்வாக எதுவும் அமையாத நிலையில் இலங்கையினுடைய ஆளும் வர்க்கமாக இருக்கிறவர்களும் அவர்களோடு இணைந்திருக்க கூடிய அன்னிய ஏகாதிபத்திய சக்திகளும் ஒன்றிணைந்து அந்த போராட்டத்தை நசுக்கியது மாத்திரமல்ல அந்த போராட்டத்தில் யார் யாரை மக்கள் குற்றம் சாட்டினார்களோ அவர்களே புதிய வடிவில் எமது நாட்டுக்கு வந்ததாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ரணில் விக்கிரமசிங்க என்ற ஒரு பாராளுமன்றத்துக்கே தெரிவு செய்யப்படாத ஒருவர் ஆட்சிக்கு வந்திருக்கிற நிலைமை எமது நாட்டுக்கு வந்திருக்கிறது. ரணில் விக்கிரம சிங்க என்பவர் இலங்கை அரசியலுக்கு புதியவரும் அல்ல. இலங்கையிலே உள்ள மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லப்போபவரும் அல்ல என்பதை நாங்கள் கடந்த காலத்திலிருந்து நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர் உண்மையிலே யாருடைய நலன்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியானார் என்பதை கடந்த ஒருவருடத்துக்கு மேலான ஆட்சியிலே காணக்கூடியதாக இருந்தது.
உண்மையிலே அவர் இந்த நாட்டிலே இருந்த மிகப்பெரிய சொத்து சுகம் படைத்த தரகு முதலாளிகள் என்று சொல்லக்கூடிய பெரிய முதலாளிகளுக்கும் அவர்களுடைய சொத்துக்களுக்கும், அவர்களுடைய முதலீடுகளுக்கும் தான் பாதுகாவலனாக இருக்கிறாரே தவிர சாதாரண உழைக்கின்ற மக்களுக்கான பாதுகாவலனாக இல்லை. எனவே தான் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவிக்கு கொண்டு வந்திருக்கின்ற போது அதற்குப் பின்னால் கடந்த காலத்திலே ஆட்சி செய்து மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட, பதவிகளில் இருந்து துறக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பம் பதுங்கிக்கொண்டதை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது.
எனவே அந்த ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் மிக மோசமாக மக்களை அடக்குமுறை செய்த ராஜபக்ஷ குடும்பம் பாதுகாப்பு பெற்று தங்களிடமிருந்த பாராளுமன்ற எண்ணிக்கையை ரணில் விக்கிரம சிங்காவுக்காக பயன்படுத்தி ரணில் ஜனாதிபதியாக வரக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தினார்.
ஜே.ஆர். ஜெயவர்தனவினுடைய உறவினரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதே ஜெ.ஆர். ஜெயவர்தனவினுடைய பாதையில் தான் ஆட்சியை இன்றும் முன்னெடுத்துச் செல்கிறார் என்ற உண்மையை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய காலகாட்டம் இன்று வந்திருக்கிறது .
கடந்த 44 ஆண்டுகாலமாக 1978 ஆம் ஆண்டிலே இருந்து வந்த ஜே.ஆர். ஜெயவர்தன உருவாகிய அரசியலமைப்புதான் இன்றைக்கும் நடைமுறையிலிருக்கிறது.அந்த அரசியலமைப்பு தான் தேசிய பொருளாதாரத்தை இல்லாமல் செய்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்து தனிநபர் சர்வதிகாரத்தை நிலை நிறுத்தி அதன் கீழ் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, சிங்கள, முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் என்று சொல்லக்கூடிய இந்த நாட்டின் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரான அடக்கு முறை ஆட்சியை அவர்கள் நடத்தி வந்திருக்கிறார்கள் . எனவே தான் இந்த அரசியலமைப்பு தூக்கி வீசப்படவேண்டும் மக்கள் ஜனநாயகத்தை கொண்ட அரசியலமைப்பு உருவாக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துக்கிறோம் என்றார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ரணிலால் முடியாது. சி.கா.செந்திவேல் தெரிவிப்பு.samugammedia இலங்கையில் நடைபெற்ற அரக்கல போராட்டம் பொருளாதார நெருக்கடியின் வெளிபாடாக அரசியல் நெருக்கடியின் வெளிப்பாடாக நாங்கள் எல்லோரும் அறிந்துள்ளோம். ஆனால் அந்த மக்கள் எதிர்பார்த்த தீர்வாக எதுவும் அமையாத நிலையில் இலங்கையினுடைய ஆளும் வர்க்கமாக இருக்கிறவர்களும் அவர்களோடு இணைந்திருக்க கூடிய அன்னிய ஏகாதிபத்திய சக்திகளும் ஒன்றிணைந்து அந்த போராட்டத்தை நசுக்கியது மாத்திரமல்ல அந்த போராட்டத்தில் யார் யாரை மக்கள் குற்றம் சாட்டினார்களோ அவர்களே புதிய வடிவில் எமது நாட்டுக்கு வந்ததாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க என்ற ஒரு பாராளுமன்றத்துக்கே தெரிவு செய்யப்படாத ஒருவர் ஆட்சிக்கு வந்திருக்கிற நிலைமை எமது நாட்டுக்கு வந்திருக்கிறது. ரணில் விக்கிரம சிங்க என்பவர் இலங்கை அரசியலுக்கு புதியவரும் அல்ல. இலங்கையிலே உள்ள மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லப்போபவரும் அல்ல என்பதை நாங்கள் கடந்த காலத்திலிருந்து நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர் உண்மையிலே யாருடைய நலன்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியானார் என்பதை கடந்த ஒருவருடத்துக்கு மேலான ஆட்சியிலே காணக்கூடியதாக இருந்தது. உண்மையிலே அவர் இந்த நாட்டிலே இருந்த மிகப்பெரிய சொத்து சுகம் படைத்த தரகு முதலாளிகள் என்று சொல்லக்கூடிய பெரிய முதலாளிகளுக்கும் அவர்களுடைய சொத்துக்களுக்கும், அவர்களுடைய முதலீடுகளுக்கும் தான் பாதுகாவலனாக இருக்கிறாரே தவிர சாதாரண உழைக்கின்ற மக்களுக்கான பாதுகாவலனாக இல்லை. எனவே தான் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவிக்கு கொண்டு வந்திருக்கின்ற போது அதற்குப் பின்னால் கடந்த காலத்திலே ஆட்சி செய்து மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட, பதவிகளில் இருந்து துறக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பம் பதுங்கிக்கொண்டதை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது. எனவே அந்த ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் மிக மோசமாக மக்களை அடக்குமுறை செய்த ராஜபக்ஷ குடும்பம் பாதுகாப்பு பெற்று தங்களிடமிருந்த பாராளுமன்ற எண்ணிக்கையை ரணில் விக்கிரம சிங்காவுக்காக பயன்படுத்தி ரணில் ஜனாதிபதியாக வரக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தினார். ஜே.ஆர். ஜெயவர்தனவினுடைய உறவினரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதே ஜெ.ஆர். ஜெயவர்தனவினுடைய பாதையில் தான் ஆட்சியை இன்றும் முன்னெடுத்துச் செல்கிறார் என்ற உண்மையை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய காலகாட்டம் இன்று வந்திருக்கிறது . கடந்த 44 ஆண்டுகாலமாக 1978 ஆம் ஆண்டிலே இருந்து வந்த ஜே.ஆர். ஜெயவர்தன உருவாகிய அரசியலமைப்புதான் இன்றைக்கும் நடைமுறையிலிருக்கிறது.அந்த அரசியலமைப்பு தான் தேசிய பொருளாதாரத்தை இல்லாமல் செய்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்து தனிநபர் சர்வதிகாரத்தை நிலை நிறுத்தி அதன் கீழ் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, சிங்கள, முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் என்று சொல்லக்கூடிய இந்த நாட்டின் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரான அடக்கு முறை ஆட்சியை அவர்கள் நடத்தி வந்திருக்கிறார்கள் . எனவே தான் இந்த அரசியலமைப்பு தூக்கி வீசப்படவேண்டும் மக்கள் ஜனநாயகத்தை கொண்ட அரசியலமைப்பு உருவாக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துக்கிறோம் என்றார்.