ரணிலை இன்னும் நம்புவதற்கு நாம் தயாரில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டார். அதனால் இனியும் அவர் நல்லவர்
நம்பிக்கைக்கு உரியவர் என்று சொல்லமுடியாது.
மற்ற வேட்பாளர் ஓர் இளைஞர். இவர்களில் யார் நல்லவர் என்று சொல்லமுடியாத நிலை உள்ளது.
அவர்கள் இருவரும் சிங்கள பௌத்த எண்ணத்தில் ஊறி இருப்பவர்கள்.
அதில் இருந்து வெளியே வரக்கூடியவர்களாக அவர்கள் இல்லை.
தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சி ஏதேனும் ஒரு காரணத்தால் தோல்வி அடையுமாக இருந்தால் அடுத்த கட்டமாக உங்கள் நடவடிக்கை என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்னேஸ்வரன் எம்.பி,
இதில் தோல்வி அடைவதற்கு இடமில்லை. தமிழ் பொது வேட்பாளர் போட்டியில் வெல்லவேண்டும் என்று வரவில்லை. எங்கள் மக்களின் பிரச்னைகளை உலகறியச் செய்யவேண்டும் என்பதற்காகவே அவரை முன்னிலைப்படுத்துகிறோம். இதில் தோற்றுப்போக எதுவும் இல்லை. தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி தமிழர்களின் அபிலாஷைகள் என்ன என்பதை தெரியப்படுத்தும் நிலையை நாம் உண்டாக்க முடியும். இதுதான் எங்கள் பலம் எங்கள் கணிப்பு என பதிலளித்தார்.
ரணில் துரோகம் இழைத்துவிட்டார். இனியும் அவரை நம்பமாட்டோம் - விக்னேஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டு. ரணிலை இன்னும் நம்புவதற்கு நாம் தயாரில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டார். அதனால் இனியும் அவர் நல்லவர் நம்பிக்கைக்கு உரியவர் என்று சொல்லமுடியாது.மற்ற வேட்பாளர் ஓர் இளைஞர். இவர்களில் யார் நல்லவர் என்று சொல்லமுடியாத நிலை உள்ளது.அவர்கள் இருவரும் சிங்கள பௌத்த எண்ணத்தில் ஊறி இருப்பவர்கள்.அதில் இருந்து வெளியே வரக்கூடியவர்களாக அவர்கள் இல்லை.தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சி ஏதேனும் ஒரு காரணத்தால் தோல்வி அடையுமாக இருந்தால் அடுத்த கட்டமாக உங்கள் நடவடிக்கை என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்னேஸ்வரன் எம்.பி,இதில் தோல்வி அடைவதற்கு இடமில்லை. தமிழ் பொது வேட்பாளர் போட்டியில் வெல்லவேண்டும் என்று வரவில்லை. எங்கள் மக்களின் பிரச்னைகளை உலகறியச் செய்யவேண்டும் என்பதற்காகவே அவரை முன்னிலைப்படுத்துகிறோம். இதில் தோற்றுப்போக எதுவும் இல்லை. தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி தமிழர்களின் அபிலாஷைகள் என்ன என்பதை தெரியப்படுத்தும் நிலையை நாம் உண்டாக்க முடியும். இதுதான் எங்கள் பலம் எங்கள் கணிப்பு என பதிலளித்தார்.