• Nov 25 2024

அராஜகங்களுக்கு முடிவுகட்டிய ஒரேயொரு தலைவர் ரணிலே- பிரதமர் தினேஷ் தெரிவிப்பு!

Tamil nila / Sep 15th 2024, 6:51 pm
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான தருணத்தில் நாட்டை ஏற்றுக்கொண்டு அராஜக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி இருந்த காலத்தை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். நாடு இருந்தது. ஆனால், நாட்டுக்கு ஒரு தலைவர் அன்று இருக்கவில்லை. தலைவர் இல்லாத நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான தருணத்தில் நாட்டை ஏற்றுக்கொண்டு அந்த அராஜக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜனாதிபதிக்கு இருப்பது போல் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைச் செயற்படுத்திய அனுபவம் எதிர்த்தரப்பு வேட்பாளர்களுக்கு இல்லை. நாட்டின் தலைவர் ஒருவருக்கு சர்வதேச தொடர்புகள் கட்டாயமானது. அந்தச் சர்வதேச தொடர்புகள் எதிர்த் தரப்பு வேட்பாளர்கள் இருவருக்குமே இல்லை. அன்றும் சிலர் நாட்டின் ஆட்சியை அராஜகமான முறையில் கைப்பற்ற முயற்சித்தனர். அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

தற்போது இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கை தொடர்ந்தால் மட்டுமே நாட்டின் முன்னேற்றம் நிலைக்கும். குறைந்தபட்ச வருமானம் ஈட்டுவோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிவராணங்களை வழங்க வழி செய்திருக்கிறார்.

இன்று நாட்டில் நாளாந்தம் பல விமான சேவைகளை முன்னெடுக்கப்படுகின்றன. அந்தளவுக்கு இலங்கைக்குச் சுற்றுலாப் பிரயாணிகள் வந்து குவிகின்றனர். எனவே, நாட்டை மீட்ட தலைவருக்கு வாக்களிப்பதா? மக்களைக் கஷ்டத்தில் விட்டு தம்மைக் காப்பாறிக்கொண்ட தலைவர்களுக்கு வாக்களிப்பதா? என்பதை மக்கள் தீ்ர்மானிக்க வேண்டும்." - என்றார்.

அராஜகங்களுக்கு முடிவுகட்டிய ஒரேயொரு தலைவர் ரணிலே- பிரதமர் தினேஷ் தெரிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான தருணத்தில் நாட்டை ஏற்றுக்கொண்டு அராஜக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,"நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி இருந்த காலத்தை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். நாடு இருந்தது. ஆனால், நாட்டுக்கு ஒரு தலைவர் அன்று இருக்கவில்லை. தலைவர் இல்லாத நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான தருணத்தில் நாட்டை ஏற்றுக்கொண்டு அந்த அராஜக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.ஜனாதிபதிக்கு இருப்பது போல் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைச் செயற்படுத்திய அனுபவம் எதிர்த்தரப்பு வேட்பாளர்களுக்கு இல்லை. நாட்டின் தலைவர் ஒருவருக்கு சர்வதேச தொடர்புகள் கட்டாயமானது. அந்தச் சர்வதேச தொடர்புகள் எதிர்த் தரப்பு வேட்பாளர்கள் இருவருக்குமே இல்லை. அன்றும் சிலர் நாட்டின் ஆட்சியை அராஜகமான முறையில் கைப்பற்ற முயற்சித்தனர். அந்த முயற்சிகள் கைகூடவில்லை.தற்போது இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கை தொடர்ந்தால் மட்டுமே நாட்டின் முன்னேற்றம் நிலைக்கும். குறைந்தபட்ச வருமானம் ஈட்டுவோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிவராணங்களை வழங்க வழி செய்திருக்கிறார்.இன்று நாட்டில் நாளாந்தம் பல விமான சேவைகளை முன்னெடுக்கப்படுகின்றன. அந்தளவுக்கு இலங்கைக்குச் சுற்றுலாப் பிரயாணிகள் வந்து குவிகின்றனர். எனவே, நாட்டை மீட்ட தலைவருக்கு வாக்களிப்பதா மக்களைக் கஷ்டத்தில் விட்டு தம்மைக் காப்பாறிக்கொண்ட தலைவர்களுக்கு வாக்களிப்பதா என்பதை மக்கள் தீ்ர்மானிக்க வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement