விவசாயத் துறையில் மாற்றம் ஏற்படவேண்டுமெனில் விவசாயிகளின் மனப்பான்மையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதாவது பாரம்பரிய முறைகளைத் தாண்டி தொழில்நுட்பம் மற்றும் நவீன நடைமுறைகளை ஏற்றுக்கொள்கின்ற மனநிலை மாற்றம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடு வழங்கும் நிகழ்வு நேற்று(10) கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பாரம்பரிய விவசாய நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு நவீன நடைமுறைகளுக்கு மாற வேண்டியது காலத்தின் தேவையாகும். ஏனெனில் எதிர்காலங்களில் நிலம் நீர் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே நவீன விவசாய முறையில் இவற்றை சிக்கனமாக பயன்படுத்த முடியும்.
சிறிய நிலப்பகுதியில் குறைந்தளவு செலவு மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெற முடியும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுப்படுத்தும். இன்றைய தினம் கூட வழங்கும் கருவிகள் இதற்காகவே வழங்கப்படுகின்றன. இதற்கான தொழில் நுட்ப உதவிகளும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே இதனை சரியாக தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.
எமது மாவட்ட செயலக வளாகத்தில் கூட நவீன விவசாய முறைகளை பின்பற்றி மிளகாய் மற்றும் தக்காளி செய்கையினை சிறிய நிலத்தில் மேற்கொண்டு அதிக விளைச்சலைப் பெற்றுக்கொண்டுள்ளோம். மேலும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் சமூக வலுவூட்டல் அமைச்சின் 65 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் 10 பச்சை வீடுகளை அமைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிறிய விவசாய சமூகம் ஒன்றை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.
இதற்கு 30 விவசாயிகள் தெரிவு செய்யப்படவுள்ளநிலையில் தற்போதுவரை வரை 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிலிருந்து முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள். இதனூடாக நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்க இது உந்துசக்தியாக அமையும்.
தற்போது அதிகளவான இரசாயன பசளை மற்றும் பூச்சி நாசினிகளின் பயன்பாட்டினால் அதிகளவான நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு எமது மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவினை சுட்டிக்காட்ட முடியும்.
ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளை விட இங்கு கிட்னி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் வெள்ள அனர்த்த காலங்களில் அதிகளவான் நீர் தேங்கி நிற்கும் இடமாக குறித்த பிரதேசம் காணப்படுகின்றது. ஏனைய இடங்களில் இருந்து வரும் நீருடன் இரசாயன பசளை மற்றும் பூச்சி நாசினிகளின் கலந்து இங்கு நீண்ட காலங்கள் தேங்குவதால் அவை நிலத்தில் ஊறி காலப்போக்கில் இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
இதனை உணர்ந்து விவசாய தொழில்நுட்ப முன்னேற்றத்தை பயன்படுத்தி முன்னேறவேண்டும். விவசாயிகளின் மற்றும் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதனூடாகவே உடலின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். மேட்டு நிலங்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களில் கூட இதனை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
விவசாயிகளிடம் நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்கின்ற மனநிலை ஏற்படவேண்டும் - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் விவசாயத் துறையில் மாற்றம் ஏற்படவேண்டுமெனில் விவசாயிகளின் மனப்பான்மையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதாவது பாரம்பரிய முறைகளைத் தாண்டி தொழில்நுட்பம் மற்றும் நவீன நடைமுறைகளை ஏற்றுக்கொள்கின்ற மனநிலை மாற்றம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடு வழங்கும் நிகழ்வு நேற்று(10) கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,பாரம்பரிய விவசாய நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு நவீன நடைமுறைகளுக்கு மாற வேண்டியது காலத்தின் தேவையாகும். ஏனெனில் எதிர்காலங்களில் நிலம் நீர் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே நவீன விவசாய முறையில் இவற்றை சிக்கனமாக பயன்படுத்த முடியும். சிறிய நிலப்பகுதியில் குறைந்தளவு செலவு மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெற முடியும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுப்படுத்தும். இன்றைய தினம் கூட வழங்கும் கருவிகள் இதற்காகவே வழங்கப்படுகின்றன. இதற்கான தொழில் நுட்ப உதவிகளும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே இதனை சரியாக தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.எமது மாவட்ட செயலக வளாகத்தில் கூட நவீன விவசாய முறைகளை பின்பற்றி மிளகாய் மற்றும் தக்காளி செய்கையினை சிறிய நிலத்தில் மேற்கொண்டு அதிக விளைச்சலைப் பெற்றுக்கொண்டுள்ளோம். மேலும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் சமூக வலுவூட்டல் அமைச்சின் 65 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் 10 பச்சை வீடுகளை அமைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி சிறிய விவசாய சமூகம் ஒன்றை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம். இதற்கு 30 விவசாயிகள் தெரிவு செய்யப்படவுள்ளநிலையில் தற்போதுவரை வரை 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிலிருந்து முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள். இதனூடாக நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்க இது உந்துசக்தியாக அமையும். தற்போது அதிகளவான இரசாயன பசளை மற்றும் பூச்சி நாசினிகளின் பயன்பாட்டினால் அதிகளவான நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு எமது மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவினை சுட்டிக்காட்ட முடியும். ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளை விட இங்கு கிட்னி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் வெள்ள அனர்த்த காலங்களில் அதிகளவான் நீர் தேங்கி நிற்கும் இடமாக குறித்த பிரதேசம் காணப்படுகின்றது. ஏனைய இடங்களில் இருந்து வரும் நீருடன் இரசாயன பசளை மற்றும் பூச்சி நாசினிகளின் கலந்து இங்கு நீண்ட காலங்கள் தேங்குவதால் அவை நிலத்தில் ஊறி காலப்போக்கில் இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.இதனை உணர்ந்து விவசாய தொழில்நுட்ப முன்னேற்றத்தை பயன்படுத்தி முன்னேறவேண்டும். விவசாயிகளின் மற்றும் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதனூடாகவே உடலின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். மேட்டு நிலங்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களில் கூட இதனை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.