• Sep 12 2025

அரசின் உயர் அதிகாரிகள் ஹெலிகொப்டரில் ஓட்டம்; நேபாளத்தில் அடுத்தடுத்து திகில் காட்சிகள்!

shanuja / Sep 11th 2025, 11:18 pm
image

நேபாள அரசின் உயர் அதிகாரிகள்  ஹெலிகொப்டர் மூலம் தப்பியோடும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.  


நேபாளத்தில் மக்கள் முன்னெடுத்த போராட்டம் தற்பொழுது கலவரமாக மாறியுள்ளது. 


சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேபாளத்தின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


கொந்தளித்த போராட்டக்காரர்கள்  நேபாள பிரதமரின் இல்லம், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், பாராளுமன்ற கட்டடம் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்குத் தீ வைத்துள்ளனர். அதுமட்டுமன்றி நீதிமன்றங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. 


அதுபோக நேபாள நிதியமைச்சரையும் பொதுமக்கள் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளனர். 

நிலைமை மோசமாகி வர நேபாளத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. எனினும் ஊரடங்கையும் மீறி கலவரம் வெடித்துக் கொண்டுள்ளது. 


இந்த நிலையில் நேபாள அரசின் உயர் அதிகாரிகளும் மக்களுக்குப் பயந்து ஹெலிகொப்டர்கள் மூலம் தப்பித்து ஓடியுள்ளனர். 


எதிர்பார்க்க முடியாத அளவிற்கு நேபாளத்தில் போராட்டம் கலவரமடைந்து  எல்லை மீறிச் செல்கின்றது.

அரசின் உயர் அதிகாரிகள் ஹெலிகொப்டரில் ஓட்டம்; நேபாளத்தில் அடுத்தடுத்து திகில் காட்சிகள் நேபாள அரசின் உயர் அதிகாரிகள்  ஹெலிகொப்டர் மூலம் தப்பியோடும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.  நேபாளத்தில் மக்கள் முன்னெடுத்த போராட்டம் தற்பொழுது கலவரமாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேபாளத்தின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொந்தளித்த போராட்டக்காரர்கள்  நேபாள பிரதமரின் இல்லம், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், பாராளுமன்ற கட்டடம் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்குத் தீ வைத்துள்ளனர். அதுமட்டுமன்றி நீதிமன்றங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. அதுபோக நேபாள நிதியமைச்சரையும் பொதுமக்கள் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளனர். நிலைமை மோசமாகி வர நேபாளத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. எனினும் ஊரடங்கையும் மீறி கலவரம் வெடித்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நேபாள அரசின் உயர் அதிகாரிகளும் மக்களுக்குப் பயந்து ஹெலிகொப்டர்கள் மூலம் தப்பித்து ஓடியுள்ளனர். எதிர்பார்க்க முடியாத அளவிற்கு நேபாளத்தில் போராட்டம் கலவரமடைந்து  எல்லை மீறிச் செல்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement