• Sep 08 2024

குதிரை சின்னத்தில் களமிறங்கும் ரணில்?

Tharun / Jul 20th 2024, 6:42 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பொதுச் சின்னமாக குதிரை சின்னத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுக் கூட்டணியின் பெயர், சின்னம் என்பன பற்றிய இறுதிக்கட்ட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது.

யானை, அன்னம் மற்றும் மொட்டு என்பன பொதுச் சின்னமாக இருக்கக் கூடாது எனப் பெரும்பாலானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனால் பொதுச் சின்னமாக குதிரை சின்னத்தை தேர்ந்தெடுப்பது பற்றி ஜனாதிபதி ரணில் ஆராய்ந்து வருகின்றார். கப்பல் சின்னத்தை ஏற்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், பொருளாதார போரில் வெல்வதற்குக் குதிரை போல் வேகமாகப் பயணிக்ககூடிய ஒருவரே தேவை என்ற பிரசாரம் குதிரை சின்னம் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குதிரை சின்னத்தில் களமிறங்கும் ரணில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பொதுச் சின்னமாக குதிரை சின்னத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பொதுக் கூட்டணியின் பெயர், சின்னம் என்பன பற்றிய இறுதிக்கட்ட கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது.யானை, அன்னம் மற்றும் மொட்டு என்பன பொதுச் சின்னமாக இருக்கக் கூடாது எனப் பெரும்பாலானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.இதனால் பொதுச் சின்னமாக குதிரை சின்னத்தை தேர்ந்தெடுப்பது பற்றி ஜனாதிபதி ரணில் ஆராய்ந்து வருகின்றார். கப்பல் சின்னத்தை ஏற்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனினும், பொருளாதார போரில் வெல்வதற்குக் குதிரை போல் வேகமாகப் பயணிக்ககூடிய ஒருவரே தேவை என்ற பிரசாரம் குதிரை சின்னம் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement