• Sep 20 2024

மைத்திரியின் ஆதரவு தூதை நிராகரித்தார் ரணில்..!

Chithra / Aug 16th 2024, 12:20 pm
image

Advertisement


ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ரணில் நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கையை நிராகரித்த ரணில், நம்ப முடியாத ஒருவரின் ஆதரவு தமக்கு வேண்டாமென தெரிவித்ததாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பெலியத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் குழு பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது போக வழியில்லாத நிலையில் இருக்கிறார், எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. 

தன் மீது பிறர் வைத்துள்ள நம்பிக்கையை தாமே சிதைக்கும்போது இவ்வாறான நிலையே ஏற்படும். இப்போது அவர் ஏதாவது ஒரு குப்பையை கிளற தேடுகிறார்.

ஆனால், ஒரு முன்னாள் ஜனாதிபதி, இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் சென்றதை நினைத்து நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் ஆதரவு தூதை நிராகரித்தார் ரணில். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ரணில் நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அந்த கோரிக்கையை நிராகரித்த ரணில், நம்ப முடியாத ஒருவரின் ஆதரவு தமக்கு வேண்டாமென தெரிவித்ததாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.பெலியத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் குழு பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது போக வழியில்லாத நிலையில் இருக்கிறார், எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தன் மீது பிறர் வைத்துள்ள நம்பிக்கையை தாமே சிதைக்கும்போது இவ்வாறான நிலையே ஏற்படும். இப்போது அவர் ஏதாவது ஒரு குப்பையை கிளற தேடுகிறார்.ஆனால், ஒரு முன்னாள் ஜனாதிபதி, இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் சென்றதை நினைத்து நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement