• Nov 22 2024

மன்னாரில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் ரிஷாட் பதியுதீன் - மக்கள் குற்றச்சாட்டு..!

Sharmi / Aug 16th 2024, 12:20 pm
image

மன்னார் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற சென்று அமைச்சராக பணியாற்றிய ரிஷாட் பதியுதீன், எந்தவிதமான அக்கறையும் இன்றி செயற்படுவதாக மன்னார் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக மன்னார் வைத்தியசாலை அதன் அபிவிருத்தி தொடர்பில் எந்த வித அக்கறையும் செலுத்தாத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற தனது கட்சி கூட்டத்தில் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் பேசியுள்ளார்.

புத்தளம் வாக்காளர்களை கவருவதற்காக அவர்களின் வாக்குகளை சுருட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பத்து அம்ச கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கையாக புத்தளம் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதையும் அதனை தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக கூறியிருக்கின்றார்.

மன்னார் வைத்தியசாலை இவ்வளவு கேவலமான நிலையில் காணப்படுகின்ற போது 5 வருடங்களுக்கு மேலாக அதை எட்டிக்கூட பார்க்காத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், புத்தளம் வாக்காளர்களை ஏமாற்ற இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமாத்திரம் இல்லாமல், கடந்த வருடம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு உட்பட பல பிரச்சினைகள் நிலவி வந்த நிலையில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாத்திரம் மன்னார் வைத்தியசாலைக்கு சமூகமளிக்காது, கிழக்கில் உள்ள சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் ரிஷாட் பதியுதீன் - மக்கள் குற்றச்சாட்டு. மன்னார் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற சென்று அமைச்சராக பணியாற்றிய ரிஷாட் பதியுதீன், எந்தவிதமான அக்கறையும் இன்றி செயற்படுவதாக மன்னார் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.குறிப்பாக மன்னார் வைத்தியசாலை அதன் அபிவிருத்தி தொடர்பில் எந்த வித அக்கறையும் செலுத்தாத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற தனது கட்சி கூட்டத்தில் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் பேசியுள்ளார்.புத்தளம் வாக்காளர்களை கவருவதற்காக அவர்களின் வாக்குகளை சுருட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பத்து அம்ச கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கையாக புத்தளம் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதையும் அதனை தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக கூறியிருக்கின்றார்.மன்னார் வைத்தியசாலை இவ்வளவு கேவலமான நிலையில் காணப்படுகின்ற போது 5 வருடங்களுக்கு மேலாக அதை எட்டிக்கூட பார்க்காத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், புத்தளம் வாக்காளர்களை ஏமாற்ற இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுமாத்திரம் இல்லாமல், கடந்த வருடம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு உட்பட பல பிரச்சினைகள் நிலவி வந்த நிலையில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாத்திரம் மன்னார் வைத்தியசாலைக்கு சமூகமளிக்காது, கிழக்கில் உள்ள சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement