மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) காலை நாடு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அவர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார்.
முன்னதாக இலங்கையில் வைத்து ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதன் பின்னரான மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
சிகிச்சையின் பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பூரண குணமடைந்து நாடு திரும்பியுள்ளார்.
இன்றையதினம் காலை நாடு திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் வைத்து விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் அவரை வரவேற்க வருகை தந்திருந்தனர்.
சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார் ரணில் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) காலை நாடு திரும்பியுள்ளார்.கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அவர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப் பயணித்திருந்தார்.முன்னதாக இலங்கையில் வைத்து ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதன் பின்னரான மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார்.சிகிச்சையின் பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பூரண குணமடைந்து நாடு திரும்பியுள்ளார்.இன்றையதினம் காலை நாடு திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் வைத்து விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் அவரை வரவேற்க வருகை தந்திருந்தனர்.