பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் (26) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இவ் திடீர் சந்திப்புக்கான காரணம் சுமார் பத்து நாட்களுக்கு முன்னராக பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை காவல்துறை அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் தாக்கியிருந்தார்கள்.
அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சென்றிருந்தேன்.
முக்கியமாக வெளியில் இருந்து வந்து அவ் தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த காலத்தில் ராணுவத்தில் இருந்தவர்கள். இவ் சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் மிகவும் கவனமான முறையில் தங்களை நடாத்துவதாகவும், வெளியில் இருந்து வந்தவர்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுதியிருந்தார்கள்.
இது தொடர்பில், நீதி மற்றும் சிறைச்சாலைகளுக்கான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்பவருக்கும் அறிய தந்திருந்தேன்.
கைதியை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 28 வருடங்களாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தயக்கம் காட்டும் ரணில். சாணக்கியன் எம்.பி சீற்றம்.samugammedia பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் (26) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இவ் திடீர் சந்திப்புக்கான காரணம் சுமார் பத்து நாட்களுக்கு முன்னராக பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை காவல்துறை அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் தாக்கியிருந்தார்கள்.அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சென்றிருந்தேன்.முக்கியமாக வெளியில் இருந்து வந்து அவ் தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த காலத்தில் ராணுவத்தில் இருந்தவர்கள். இவ் சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் மிகவும் கவனமான முறையில் தங்களை நடாத்துவதாகவும், வெளியில் இருந்து வந்தவர்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுதியிருந்தார்கள். இது தொடர்பில், நீதி மற்றும் சிறைச்சாலைகளுக்கான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்பவருக்கும் அறிய தந்திருந்தேன்.கைதியை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.மேலும் கடந்த 28 வருடங்களாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.