புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் தற்போது வெற்றிடமாக உள்ள பதவி இன்னும் மூன்று மாதங்களுக்கு நிரப்பப்படாது என கொழும்பிலிருந்து வெளியாகும் வார நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்க ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு காஞ்சன விஜேசேகர, தினேஷ் குணவர்தன, நிமல் லான்சா, பைசர் முஸ்தபா போன்றவர்களை நியமிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அவர்களில் எவருக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காது என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எஞ்சியுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
பாராளுமன்றுக்குள் நுழையும் ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் தற்போது வெற்றிடமாக உள்ள பதவி இன்னும் மூன்று மாதங்களுக்கு நிரப்பப்படாது என கொழும்பிலிருந்து வெளியாகும் வார நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்க ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு காஞ்சன விஜேசேகர, தினேஷ் குணவர்தன, நிமல் லான்சா, பைசர் முஸ்தபா போன்றவர்களை நியமிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், அவர்களில் எவருக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காது என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. அதேவேளை, எஞ்சியுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதன்படி, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.