• Nov 24 2024

கோட்டாபயவின் வீட்டை முற்றுகையிட்டபோது உதவிய ரணில்! அம்பலப்படுத்தும் முன்னாள் பிரத்தியேக செயலாளர்

Chithra / Mar 17th 2024, 4:22 pm
image

  

மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார் என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 

அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை.

இந்நிலையில், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளனர்

2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராசபக்சவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார்.

இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. வீட்டினருகே போராட்டம் நடத்த சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல் வழங்கியிருந்தனர்.

ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கு மேல் இருக்கும். பேராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் பிரிவினரை அழைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்புப் படையினர் அரை மணித்தியாலம் தாமதித்திருந்தால் கோட்டாபய ராஜபக்சவைக் கொல்ல திட்டமிட்டிருப்பார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார்.

அத்தோடு, முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபகசவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் வீட்டை முற்றுகையிட்டபோது உதவிய ரணில் அம்பலப்படுத்தும் முன்னாள் பிரத்தியேக செயலாளர்   மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார் என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை.இந்நிலையில், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளனர்2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராசபக்சவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார்.இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. வீட்டினருகே போராட்டம் நடத்த சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல் வழங்கியிருந்தனர்.ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கு மேல் இருக்கும். பேராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் பிரிவினரை அழைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்புப் படையினர் அரை மணித்தியாலம் தாமதித்திருந்தால் கோட்டாபய ராஜபக்சவைக் கொல்ல திட்டமிட்டிருப்பார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார்.அத்தோடு, முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபகசவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement