• Dec 25 2024

ஜனாதிபதி நிதிய பணத்தை வாரியிறைத்த ரணில் - 11 மாதங்களில் ரூ.300 கோடி செலவு

Chithra / Dec 23rd 2024, 2:21 pm
image


ஜனாதிபதி நிதியத்திலிருந்து கடந்த 11 மாதங்களில் 300 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பொதுமக்களின் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு உதவியாக 58 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியாக 32 கோடி ரூபாவும் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக 16 கோடி ரூபாவும்,

இளம் பராயத்தினரின் நலனோம்புகைத் திட்டங்களுக்கு 15 கோடியும், பிக்குமார் கல்விக்காக மூன்று கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

முன்னைய காலங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தில் ஆரம்ப வகுப்பு தொடக்கம் உயர்தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உள்ளிட்ட புதிய திட்டங்களின் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளார்.

அதன் ஊடாக கூடுதலான பொதுமக்கள் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஜனாதிபதி நிதிய பணத்தை வாரியிறைத்த ரணில் - 11 மாதங்களில் ரூ.300 கோடி செலவு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கடந்த 11 மாதங்களில் 300 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் பொதுமக்களின் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு உதவியாக 58 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.அதற்கு மேலதிகமாக க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியாக 32 கோடி ரூபாவும் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக 16 கோடி ரூபாவும்,இளம் பராயத்தினரின் நலனோம்புகைத் திட்டங்களுக்கு 15 கோடியும், பிக்குமார் கல்விக்காக மூன்று கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.முன்னைய காலங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தில் ஆரம்ப வகுப்பு தொடக்கம் உயர்தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உள்ளிட்ட புதிய திட்டங்களின் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளார்.அதன் ஊடாக கூடுதலான பொதுமக்கள் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement