• Mar 16 2025

பட்டலந்த அறிக்கை குறித்து ரணில் இன்று விசேட உரை

Chithra / Mar 16th 2025, 8:09 am
image


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 

கடந்த வாரம் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். 

அந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை எதிர்காலத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது 

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். 

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

பட்டலந்த அறிக்கை குறித்து ரணில் இன்று விசேட உரை பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கடந்த வாரம் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை எதிர்காலத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement