ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதால் தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கை இன்று நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த கடிதத்தின் உண்மை தன்மை தொடர்பில் தகவல் வெளிவராத நிலையில் இக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
ஆதரவு கோரி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் அவசர கடிதம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதால் தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கை இன்று நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.இந்த கடிதத்தின் உண்மை தன்மை தொடர்பில் தகவல் வெளிவராத நிலையில் இக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.