கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகித்தவர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு அக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், காஞ்சன விஜேசேகர, பிரமித தென்னகோன், அனுராத ஜயரத்ன மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.
அந்தக் கலந்துரையாடலின் போதே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியை கட்டியமைக்க ரணில் புது வியூகம். கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகித்தவர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு அக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, கடந்த சனிக்கிழமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இதன்போது, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலில், காஞ்சன விஜேசேகர, பிரமித தென்னகோன், அனுராத ஜயரத்ன மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.அந்தக் கலந்துரையாடலின் போதே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.