எலிக்காய்ச்சல் அபாயம் மீண்டும் தீவிரம் பெற்று வரும் நிலையில் கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தற்போது பரவிவரும் எலிக்காய்ச்சல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் பற்றி எடுத்துக்கூறப்பட்டிருந்ததுடன் ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும், நோய் பரவாமல் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் தமது ஒத்துழைப்பை நல்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.
பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று காலை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார் சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தொற்று நோயியல் பிரிவு நிபுணர், பருத்தித்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பருத்தித்துறை கால்நடை வைத்திய அதிகாரி, பருத்தித்துறை நகர சபை, பருத்தித்துறை பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை ஆகியவற்றின் அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக வெளிக்கள அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
எலிக்காய்ச்சல் அபாயம் மீண்டும் தீவிரம் பருத்தித்துறையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் எலிக்காய்ச்சல் அபாயம் மீண்டும் தீவிரம் பெற்று வரும் நிலையில் கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது தற்போது பரவிவரும் எலிக்காய்ச்சல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் பற்றி எடுத்துக்கூறப்பட்டிருந்ததுடன் ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும், நோய் பரவாமல் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் தமது ஒத்துழைப்பை நல்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று காலை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார் சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தொற்று நோயியல் பிரிவு நிபுணர், பருத்தித்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பருத்தித்துறை கால்நடை வைத்திய அதிகாரி, பருத்தித்துறை நகர சபை, பருத்தித்துறை பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை ஆகியவற்றின் அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக வெளிக்கள அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.