• Mar 29 2025

"இன்று இறுதி நாள்" பாடசாலையை விழுந்து வணங்கிய இரத்தினபுரி தமிழ் மாணவர்கள்

Thansita / Mar 26th 2025, 10:25 pm
image

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை தொடர்ந்து   இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் தமது பாடசாலையை பேராலயமாக மதித்து விழுந்து வணங்கிய செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

குறித்த செயற்பாட்டின்  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

பரீட்சைகள் முடிவடைந்ததும், பரிட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர்களை  வணங்கி விடை பெற்றதுடன்,  தமது பாடசாலை சூழலை சிரமதான பணிகளின் ஊடாக தூய்மைப் படுத்தியிருந்தனர். 

குறித்த செயற்பாடானது  இளையவர்களுக்கான வழிகாட்டலாகவும் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

அத்துடன் இந்த மாணவர்களை வளர்த்த ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் நன்றிகளையும்  பாராட்டுக்களையும் அனைவரும் தெரிவித்து வருகின்றனர். 

"இன்று இறுதி நாள்" பாடசாலையை விழுந்து வணங்கிய இரத்தினபுரி தமிழ் மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை தொடர்ந்து   இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் தமது பாடசாலையை பேராலயமாக மதித்து விழுந்து வணங்கிய செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறித்த செயற்பாட்டின்  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பரீட்சைகள் முடிவடைந்ததும், பரிட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர்களை  வணங்கி விடை பெற்றதுடன்,  தமது பாடசாலை சூழலை சிரமதான பணிகளின் ஊடாக தூய்மைப் படுத்தியிருந்தனர். குறித்த செயற்பாடானது  இளையவர்களுக்கான வழிகாட்டலாகவும் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த மாணவர்களை வளர்த்த ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் நன்றிகளையும்  பாராட்டுக்களையும் அனைவரும் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement