• Mar 29 2025

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்தவர் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு

Thansita / Mar 26th 2025, 7:32 pm
image

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது 

இவ்விடம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து மட்டக்களப்பு மாமாங்கம் 6ம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் த1;கியிருந்தார்.

இந் நிலையில் நேற்றையதினம் படுக்கைக்குச் சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ள நிலையில் இருந்துள்ளார்.

இதனை  கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து குறித்த சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்தவர் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது இவ்விடம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து மட்டக்களப்பு மாமாங்கம் 6ம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் த1;கியிருந்தார்.இந் நிலையில் நேற்றையதினம் படுக்கைக்குச் சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ள நிலையில் இருந்துள்ளார்.இதனை  கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்இதனையடுத்து குறித்த சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement