• Nov 26 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி ரவி செனவிரத்னவே! - உடனடியாக பதவி நீக்குக! உதய கம்மன்பில பகிரங்கம்

Chithra / Oct 21st 2024, 11:57 am
image


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட “ஏ.என்.ஜே. தி. அல்விஸ்” ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று (21) வெளியிட்டார்.

ஐ.எம்.இமாம் அறிக்கையை அடுத்த வாரம் திங்கட்கிழமை வெளியிடுவேன் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

ஏ.என்.ஜே. தி அல்விஸ் அறிக்கையில், 

தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.

இந்நிலையில், தமது அரசியல் இலாபத்துக்காகவும் தமது சகாக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே இவ்விரு அறிக்கைகளையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிடாமல் இருக்கிறார்.

அதற்கமைய ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொலிஸ் அதிகாரிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.

எனவே, அதிகாரத்தை சரியாக பயன்படுத்தாமை மற்றும் அறிக்கைகளை மூடி மறைத்தமைக்காக ஜனாதிபதி பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி ரவி செனவிரத்னவே - உடனடியாக பதவி நீக்குக உதய கம்மன்பில பகிரங்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட “ஏ.என்.ஜே. தி. அல்விஸ்” ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று (21) வெளியிட்டார்.ஐ.எம்.இமாம் அறிக்கையை அடுத்த வாரம் திங்கட்கிழமை வெளியிடுவேன் என்றும் அவர் சுட்டிகாட்டினார்.ஏ.என்.ஜே. தி அல்விஸ் அறிக்கையில், தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.இந்நிலையில், தமது அரசியல் இலாபத்துக்காகவும் தமது சகாக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே இவ்விரு அறிக்கைகளையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிடாமல் இருக்கிறார்.அதற்கமைய ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொலிஸ் அதிகாரிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.எனவே, அதிகாரத்தை சரியாக பயன்படுத்தாமை மற்றும் அறிக்கைகளை மூடி மறைத்தமைக்காக ஜனாதிபதி பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement