• Jan 25 2025

நீளம்பாய்தலில் தேசியரீதியில் ஐந்தாமிடம் பெற்ற மாணவனை : வாழ்த்திய ரவிகரன்

Tharmini / Nov 25th 2024, 9:11 am
image

நீளம்பாய்தலில் 13வயதுப்பிரிவில் தேசியரீதியில் ஐந்தாமிடம்பெற்ற தலை மன்னார் சென் லோரன்ஸ் ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் கியூபட் கேய்ன் எனும் மாணவனை.

நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வன்னித்தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளரான அன்ரனி டலிமா கலிஸ்ரா ஆகியோர் வாழ்தியுள்ளனர்.  

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று (24) தலைமன்னார் பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டு மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்தார். 

இதன்போதே குறித்த மாணவனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். 

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு தலைமன்னார் மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






நீளம்பாய்தலில் தேசியரீதியில் ஐந்தாமிடம் பெற்ற மாணவனை : வாழ்த்திய ரவிகரன் நீளம்பாய்தலில் 13வயதுப்பிரிவில் தேசியரீதியில் ஐந்தாமிடம்பெற்ற தலை மன்னார் சென் லோரன்ஸ் ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் கியூபட் கேய்ன் எனும் மாணவனை.நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வன்னித்தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளரான அன்ரனி டலிமா கலிஸ்ரா ஆகியோர் வாழ்தியுள்ளனர்.  நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று (24) தலைமன்னார் பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டு மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்தார். இதன்போதே குறித்த மாணவனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு தலைமன்னார் மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement