• Nov 28 2024

"வாய்ப்பு தந்தால் வடக்கையும் கட்டியெழுப்ப தயார்" - இரா.சாணக்கியன் எம்.பி!

Tamil nila / Nov 23rd 2024, 9:02 pm
image

தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் நாங்கள் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றோம்.எங்களை அழைத்தால் அங்கு சென்று வடமாகாணத்திலும் தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பவதற்கு தயாராகயிருக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கினைப்பெற்று வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினராக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கு வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா,முனைக்காடு பகுதியில் மக்களினால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலைக்குடாவில் உள்ள ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து இந்த வரவேற்பினை வழங்கியது.

இதேபோன்று முனைக்காடு பகுதியிலும் ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து மாபெரும் வரவேற்பினை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியது.இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலானது ஒரு சவால் மிக்க தேர்தலாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மட்டக்களப்பில் பெரும் சவாலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு வீட்டு சின்னத்திற்கு ஒரே ஒரு ஆசனம் தான் கிடைக்கும் என பலராலும் பேசப்பட்டது.

பலர் பல அச்சுறுத்தல்களை கொடுத்திருந்தார்கள் மட்டக்களப்பில் நீங்கள் ஒரு சில கொலைகார கட்சிகளை சேர்த்து எடுக்காவிட்டால் நீங்கள் இம்முறை ஒரு ஆசனத்தை பெறுவதும் கஷ்டமாக இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் மூன்று ஆசனங்களை தட்டி விட்டு செல்வார்கள் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செல்ல போகின்றது என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மூளை முடுக்குகளுக்கும் சென்று மக்களோடு மக்களாக நின்றதன் காரணமாக என்னுடைய மனதில் தெரிந்திருந்தது நாங்கள் மட்டக்களப்பில் நிச்சயமாக நான்கு ஆசனங்கள் எடுக்கக்கூடிய அளவில் எமது ஆதரவு இருக்கின்றது என்பது எனக்கு தெரிந்து விடயம்.

இந்த நான்காவது ஆசனத்தை இழந்தது வெறும் 8000 வாக்குகளினால் நான்காவது ஆசனம் பெறுவதற்கும் சில வழிகள் காணப்பட்டது அந்த நான்காவது ஆசானம் பெற முடியாமல் போனது சில கட்சிக்குள்ளே இருக்கின்ற சிலர் அதாவது கட்சிக்குள் இருப்பவர்கள் என்பதை விட கட்சிக்கு எதிராக செயல்பட்டு என்னுடைய விருப்பு வாக்குகளை குறைக்க வேண்டும் என எடுத்த சில முன்னெடுப்புகளின் காரணமாகத்தான் அந்த 8000 வாக்குகள் இல்லாமல் சென்றது அவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே 8000 வாக்குகளுக்கு மேலதிகமாக கிடைக்கப்பெற்றிருக்கும்.

சில இடங்களுக்கு சென்று சாணக்கியனுக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்று கூறியதனால் தான் அந்த இடத்திற்கு நான் சென்று இல்லை எனக்கு வாக்களிக்க வேண்டும் என நியாயப்படுத்தியதனால் வெளியில் இருக்கின்ற வாக்காளர்களை உள்ளே கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டது இல்லாவிட்டால் எமக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கப்பெற்று மட்டக்களப்பில் நாங்கள் மூன்று ஆசனங்களை எடுத்து வரலாறிலே ஒரு சாதனை ஒன்றினை படைத்திருக்கின்றோம் அது இந்த முனைக்காடு கிராமத்தில் வசிக்கின்ற மக்களது பெரும்பான்மையில்தான் செய்தோம் என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன்.

கடந்த தேர்தலில் ஒரு கட்சி ஐந்து மாவட்டங்களிலும் போட்டி போட்டு கிட்டத்தட்ட 50 வேட்பாளர்கள் சேர்ந்து 65,000 வாக்குகள் தான் பெற்றார்கள் நான் மட்டக்களப்பில் தனித்து நின்று அதைவிட 200 வாக்குகள் அதிகமாக பெற்றிருக்கின்றேன் அவ்வளவு கட்சிகள் கூறினார்கள் அந்த கட்சி இந்த கட்சி அவர்கள் அவ்வாறு இவர்கள் இவ்வாறு என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் மக்கள் இம்முறை மக்களின் மனநிலை கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், கற்பழித்தவர்கள், கப்பம் வாங்கியவர்கள், தரகு வாங்கியவர்கள், மண் கடத்தியவர்கள் இவர்கள் அனைவரையும் நிராகரிக்க வேண்டும் என்று மக்கள் ஒரே அடியாக மட்டக்களப்பில் பார்த்தீர்கள் என்றால் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா, ஜனா, துறைரெட்னம் இவ்வாறு பெரிய பெயர்கள் இவர்கள் எல்லாம் 30 வருடங்களாக இந்த பிரதேசத்தில் பேசப்பட்ட பெயர்கள் முழு பெயரையும் மக்கள் துரத்தி விட்டார்கள்.

எமது கட்சியிலும் மூன்று ஆசனம் கிடைக்கப்பெற்றது எனது வாக்குகளினால் எமது கட்சியிலும் எனக்கு 65,000 வாக்குகள் எனக்கு அடுத்ததாக இருந்தவருக்கு 22,000 வாக்குகள் எனக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குகள் கிடைக்கப்பெறாமல் இருந்திருந்தால் எமது கட்சியிலும் ஒரு ஆசனம் தான் கிடைக்கப்பெற்றிருக்கும்.

ஆனால் நாங்கள் இதிலிருந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் தமிழரசு கட்சியை தனித்துவமாக நாங்கள் பலப்படுத்த வேண்டும் எனக்கு மற்றய மாவட்டங்களை பற்றி கூற முடியாது எதிர்வரும் காலங்களில் அந்த பொறுப்பு தரப்பட்டால் ஏனைய மாவட்டங்களை இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டி எழுப்பியது போல ஏனைய மாவட்டங்களையும் கட்டி எழுப்ப தயார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு வருடங்களாக நான் அம்பாறை திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பல சவால்களுக்கு முகம் கொடுத்தோம் அந்த மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக செயல்பட்டோம் அதனால் தான் கிழக்கு மாகாணத்தில் அதிகளவு வாக்குகள் கிடைக்கப்பெற்று தமிழரசு கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் ஐந்து ஆசனங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

வடக்கையும் கட்டி எழுப்ப நாங்கள் தயார் வாருங்கள் என்று எம்மை அழைத்தால் அங்கும் சென்று வடக்கை கட்டி எழுப்ப நாங்கள் தயார் யாழ்ப்பாணத்திற்கும் வர தயார் வன்னிக்கு வருவதற்கும் தயார் அங்கும் வந்து மக்களுடன் மக்களாக நின்று தமிழரசு கட்சியை கட்டி எழுப்ப தயார்.

நாட்டில் ஜனாதிபதி அவர்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆசனங்களை பெற்றுவிட்டார் நாங்கள் உண்மையில் எதிர்பார்த்தது 105 ஆசனங்கள் தான் கிடைக்கப்பெறும் என்று சிங்கள மக்கள் வாக்களித்ததை பற்றி நாங்கள் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனம் வன்னியில் இரண்டு ஆசனம் என்றால் சிங்கள மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்களா? அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள் ஆனால் நாட்டில் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க வந்திருக்கின்றார் அவருடைய கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க பெற்று இருக்கின்றது என்பதனை நாங்கள் பெரிய ஒரு பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இதே போன்று தான் கோட்டா அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது கூறினார்கள் ராஜபக்ஷ ஆட்சி 25 ஆண்டுகளுக்கு தொடரும் என்று ஆனால் ராஜபக்ஷ அரசாங்கத்தை விட இந்த ஜனாதிபதியின் உடைய இனவாதமான செயற்பாடுகள் திருமணமாக இன்னமும் காணவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் நாங்கள் அவரை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு படத்தில் கூறுவார்கள் பூ பாதையா சிங்கப் பாதையா என்பதனை அவர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் இப்போதைக்கு பூ பாதையில் செல்கின்றோம் அவர்களுடைய செயற்பாடு மாறுமாக இருந்தால் நாங்கள் இனிய பாதைக்கு சென்று அவர்களை எதிர்க்கவும் தயார்.

ஆனால் ஜனாதிபதியின் உடைய சில செயல்பாடுகளும் இன்று காலையில் பார்த்தீர்கள் என்றால் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது 330 மில்லியன் அமெரிக்கன் டாலர் பணம் கிடைக்கப் பெற்று இருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் அடி வருடிகள் கூறியது ரணில் விக்ரமசிங்க இல்லாமல் போனால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இல்லாமல் போகும் என்று நாடு பங்குரோத்து நிலையை அடையும் என்றார்கள் ஆனால் ஜனாதிபதி சில விடயங்களை செய்து அந்த நிதி கிடைக்கப்பெற்று இருக்கிறது.

தமிழர்களுடைய பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அகற்றுவது ராணுவ பாதுகாப்பு அரன்களை அகற்றப்பட்டிருக்கின்றது இவ்வாறான விடயங்கள் இடம் பெற்று இருக்கின்றது நாங்கள் இப்போது ஜனாதிபதி உடைய கட்சியும் ஒரு புதிய கட்சி அதில் வருகின்ற அமைச்சர்களுக்கு நாங்கள் தான் எவ்வாறு செல்ல வேண்டும் என வழிகாட்டுகின்றோம் பாராளுமன்றத்தில் கொஞ்ச காலம் அவர்களுக்கு வழங்குவோம் மூன்று மாத காலம் வழங்குவோம் எவ்வாறு அவர்களது செயற்பாடு செல்கின்றது என்று பார்ப்போம்.

நமது மக்களும் இந்த மாதிரி காலத்தில் விவசாயத்தில் ஈடுபடும் காலம் தானே விவசாயம் அறுவடை செய்து முடித்ததன் பிற்பாடுதான் நமக்கு ஒரு ஓய்வாக இருப்போம் அந்த நேரம் வருகின்ற போது அரசாங்கம் ஓரளவு பழக வேண்டும்.

ஜனாதிபதி என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தார் என்னைக் கண்டு வந்து சந்தித்து கையை கொடுத்து "மட்டக்களப்பை மாத்திரம் தான் என்னால் பிடிக்க முடியாமல் போனது" என்று கூறினார் நான் கூறினேன் பிரச்சனை இல்லை நான் தானே அதனை பிடித்து இருக்கின்றேன் என்று கொலைகாரனோ கொள்ளைக்காரனோ பிடிக்கவில்லை நான் தான் பிடித்திருக்கின்றேன் என்றேன் பிரச்சனை இல்லை நாங்கள் சேர்ந்து வேலை செய்வோம் என கூறி இருக்கின்றேன்.

பிரதமர் அவர்களை சந்தித்து இருந்தேன் அவரை எனக்கு நீண்ட காலமாக தெரியும் அவரிடம் ஜனாதிபதியின் உரை முடிந்தது பிற்பாடு நான் கூறினேன் ஜனாதிபதியின் உரையில் தமிழ் மக்களுக்கு எதுவும் கூறவில்லை அப்போது அவர் கூறினார் ஆரம்பத்தில் நாங்கள் இனவாதம் கூறவில்லை என்றார் ஆனால் நான் கூறினேன் இனவாதம் என்பது வேறு தமிழ் மக்களது அரசியல் உரிமை என்பது வேறு அரசியல் உரிமை கோருவது இடவாதமாக உங்களுடைய ஜனாதிபதி பார்ப்பார் ஆனால் கஷ்டம் இல்லை அவ்வாறு இல்லை நாங்கள் இணைந்து வேலை செய்வோம் என்று கூறப்பட்டிருக்கின்றது.

அதேபோன்றுதான் விஜித்த ஹேரத் அமைச்சர் அவரை சந்தித்து கூறினேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ராஜகம் ஊழல் மோசடி களவு போன்ற இவ்வாறான 34 குற்றச்சாட்டுகள் பிள்ளையானுக்கும் வியாழேந்திரனுக்கும் எதிராக முன்னாள் இருந்த நாட்டினுடைய ஜனாதிபதிக்கும் பிரதமர் அவர்களுக்கும் கையளித்தேன் 34 ஊழல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் மக்களுடைய பணம் எத்தனையோ கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது என்று ஆதாரப்பூர்வமாக ஆவணங்களை வழங்கியிருந்தேன்.

முன்னாள் பிரதமர் தினேஷ்குமார் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த போது என்னை வந்து பக்கத்தில் அமருமாறு கூறினார் ஆனால் தான் கூறினேன்.

ஊழல்வாதிகளுக்கு மத்தியில் என்னால் இருக்க முடியாது என்று கூறி எதிர்பக்கத்தில் இருந்தேன் ஏனென்றால் அவருக்கு அருகில் பிள்ளையான் இருந்தார்.

அந்த கூட்டத்திலே நான் ஒரு ஆவணத்தினை பிரதமரிடம் கையளித்திருந்தேன் இந்த மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் செய்த ஊழல்கள் இருக்கின்றது என்று கொடுத்தேன் அன்று சொன்ன அந்த விடயத்தினை நான் நேற்றைய தினம் நாட்டின் உடைய புதிய அமைச்சராக தெளிவாக விஜித் கேரத்திடம் கூறினேன் இவ்வாறு ஒரு ஆவணம் தயாரித்து வழங்கினேன் ஆனால் இது தான் நடவடிக்கைகளும் அந்த அரசாங்கம் எடுக்கவில்லை என்று.

அவர் அந்த நேரத்தில் கூறினார் பிள்ளையான் மாத்திரம் அல்ல வியாழேந்திரன் அவர்களின் வீட்டு வாசலிலும் கூட ஒருவரை சுட்டார்கள் தானே அந்த கோபம் வந்திருக்கின்றது அதனையும் விசாரிக்க போகின்றோம் என கூறினார்.

மோசமான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை அவர்கள் கூறிய வாக்குறுதிகளுக்கு அமைய செய்வார்கள் என்றால் நல்லது இந்த பார் அனுமதி பத்திரம் பெற்றவர்களின் பெயர் பட்டியலையும் விரைவாக வெளியிட வேண்டும் என நான் அவர்களிடம் கூறி இருக்கின்றேன் அந்த வகையில் நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தும் இந்த பகுதியில் அபிவிருத்திகளை முன்னிறுத்தி இருக்கின்றோம் நாங்கள் அபிவிருத்தியும் செய்திருக்கின்றோம் எதிர்வரும் காலங்களிலும் செய்வோம் நாங்கள் மக்களுடன் மக்களாக நிற்போம் அடுத்து வரப் போகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் இந்த வட்டாரத்திலே முனைக்காட்டில் இருக்கின்ற இரு வட்டாரமும் அதிகூடிய அளவில் இலங்கை தமிழரசு கட்சி வென்றால்தான் இந்த பிரதேச சபையின் ஊடாக கூட பல வேலை திட்டங்களை எதிர்காலத்தில் செய்யலாம்.

இது இன்றோடு முடிகின்ற விடயம் அல்ல என்னுடைய இறுதி பரப்புரை கூட்டம் கடந்த 11ஆம் திகதி இடம் பெற்றது அந்த நேரத்தில் நமது கட்சியினுடைய உறுப்பினர்கள் கிராமத்தில் இருந்து சில பரப்புரைகளை மேற்கொண்ட போது வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் பிரச்சினைகளை முகம் கொடுத்தார்கள் நாங்கள் இனிமேல் அந்த அளவுக்கு இடம் அளிக்கக்கூடாது.

இனிமேல் எதிர்க்கட்சி என்பது ஒன்று இல்லை இந்த மாவட்டத்தில் ஆளும் கட்சியும் நாங்களே எதிர்க்கட்சியும் நாங்களே வேறு நபர்களுக்கு இங்கு நாம் இடமளிக்க போவதில்லை மக்களினுடைய குறைபாடுகளை கண்டறிந்து நாங்கள் தான் அதற்கு பாராளுமன்றம் வரை கொண்டு செல்வோம் பாராளுமன்றத்தில் தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதி வரை கொண்டு செல்வோம் அங்கும் தீர்வு காண முடியாவிட்டால் சர்வதேசம் வரை கொண்டு செல்வோம்.

அதே போன்று எமது அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் நாங்கள் முன்னெடுப்போம் எங்களுடைய வரிப்பணத்தில் கிடைக்கின்ற அபிவிருத்திகளை எமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அதையும் நாங்கள் செய்வோம் ஆனால் எங்களுடைய மக்கள் நாங்கள் எவ்வாறு கூறுகின்றனோ ஜனாதிபதியினுடைய கட்சியும் அமைச்சரோ வந்து இப்போதுதான் வேலை பழகுகின்றார்கள் ஒரு மூன்று மாதம் கால அவகாசம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

நாட்டினுடைய புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் தான் வரும் இப்போது இடைக்கால ஒரு வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போகின்றார்கள் அடுத்த மாதம் நான்காம் மாதத்தில் இருந்து தான் புதிய வரவு செலவுத் திட்டத்திற்கான வேலைகள் இடம் நான்காம் மாதத்திற்கு முன்னர் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் இடம்பெறப் போவதில்லை அதற்கு பின்னர் நாங்கள் பார்ப்போம்.

ஆனால் இந்த இடத்தில் இருந்து நாங்கள் கூறுவது ஜனாதிபதிக்கும் ஒரு எச்சரிக்கையாகவோ அல்லது ஒரு கருத்தாக கூறலாம் ஜனாதிபதி சரியாக செயல்படுவாராக இருந்தால் அவர் செய்கின்ற அனைத்து விடயங்களையும் நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை நல்ல விடயங்களை நாங்கள் ஆதரிக்கலாம் ஆனால் தமிழ் இன விரோத செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் ஆனால் அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.

தமிழ் இனம் ஒரு தனித்துவமான இடம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் இதில் நாங்கள் மாறப்போவதில்லை ஜனாதிபதியும் எங்களை மாற்ற நினைக்க கூடாது என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்- என்கிறார்.


"வாய்ப்பு தந்தால் வடக்கையும் கட்டியெழுப்ப தயார்" - இரா.சாணக்கியன் எம்.பி தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் நாங்கள் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றோம்.எங்களை அழைத்தால் அங்கு சென்று வடமாகாணத்திலும் தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பவதற்கு தயாராகயிருக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கினைப்பெற்று வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினராக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கு வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா,முனைக்காடு பகுதியில் மக்களினால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.முதலைக்குடாவில் உள்ள ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து இந்த வரவேற்பினை வழங்கியது.இதேபோன்று முனைக்காடு பகுதியிலும் ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து மாபெரும் வரவேற்பினை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியது.இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலானது ஒரு சவால் மிக்க தேர்தலாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மட்டக்களப்பில் பெரும் சவாலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு வீட்டு சின்னத்திற்கு ஒரே ஒரு ஆசனம் தான் கிடைக்கும் என பலராலும் பேசப்பட்டது.பலர் பல அச்சுறுத்தல்களை கொடுத்திருந்தார்கள் மட்டக்களப்பில் நீங்கள் ஒரு சில கொலைகார கட்சிகளை சேர்த்து எடுக்காவிட்டால் நீங்கள் இம்முறை ஒரு ஆசனத்தை பெறுவதும் கஷ்டமாக இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் மூன்று ஆசனங்களை தட்டி விட்டு செல்வார்கள் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செல்ல போகின்றது என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மூளை முடுக்குகளுக்கும் சென்று மக்களோடு மக்களாக நின்றதன் காரணமாக என்னுடைய மனதில் தெரிந்திருந்தது நாங்கள் மட்டக்களப்பில் நிச்சயமாக நான்கு ஆசனங்கள் எடுக்கக்கூடிய அளவில் எமது ஆதரவு இருக்கின்றது என்பது எனக்கு தெரிந்து விடயம்.இந்த நான்காவது ஆசனத்தை இழந்தது வெறும் 8000 வாக்குகளினால் நான்காவது ஆசனம் பெறுவதற்கும் சில வழிகள் காணப்பட்டது அந்த நான்காவது ஆசானம் பெற முடியாமல் போனது சில கட்சிக்குள்ளே இருக்கின்ற சிலர் அதாவது கட்சிக்குள் இருப்பவர்கள் என்பதை விட கட்சிக்கு எதிராக செயல்பட்டு என்னுடைய விருப்பு வாக்குகளை குறைக்க வேண்டும் என எடுத்த சில முன்னெடுப்புகளின் காரணமாகத்தான் அந்த 8000 வாக்குகள் இல்லாமல் சென்றது அவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே 8000 வாக்குகளுக்கு மேலதிகமாக கிடைக்கப்பெற்றிருக்கும்.சில இடங்களுக்கு சென்று சாணக்கியனுக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்று கூறியதனால் தான் அந்த இடத்திற்கு நான் சென்று இல்லை எனக்கு வாக்களிக்க வேண்டும் என நியாயப்படுத்தியதனால் வெளியில் இருக்கின்ற வாக்காளர்களை உள்ளே கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டது இல்லாவிட்டால் எமக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கப்பெற்று மட்டக்களப்பில் நாங்கள் மூன்று ஆசனங்களை எடுத்து வரலாறிலே ஒரு சாதனை ஒன்றினை படைத்திருக்கின்றோம் அது இந்த முனைக்காடு கிராமத்தில் வசிக்கின்ற மக்களது பெரும்பான்மையில்தான் செய்தோம் என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன்.கடந்த தேர்தலில் ஒரு கட்சி ஐந்து மாவட்டங்களிலும் போட்டி போட்டு கிட்டத்தட்ட 50 வேட்பாளர்கள் சேர்ந்து 65,000 வாக்குகள் தான் பெற்றார்கள் நான் மட்டக்களப்பில் தனித்து நின்று அதைவிட 200 வாக்குகள் அதிகமாக பெற்றிருக்கின்றேன் அவ்வளவு கட்சிகள் கூறினார்கள் அந்த கட்சி இந்த கட்சி அவர்கள் அவ்வாறு இவர்கள் இவ்வாறு என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் மக்கள் இம்முறை மக்களின் மனநிலை கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், கற்பழித்தவர்கள், கப்பம் வாங்கியவர்கள், தரகு வாங்கியவர்கள், மண் கடத்தியவர்கள் இவர்கள் அனைவரையும் நிராகரிக்க வேண்டும் என்று மக்கள் ஒரே அடியாக மட்டக்களப்பில் பார்த்தீர்கள் என்றால் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா, ஜனா, துறைரெட்னம் இவ்வாறு பெரிய பெயர்கள் இவர்கள் எல்லாம் 30 வருடங்களாக இந்த பிரதேசத்தில் பேசப்பட்ட பெயர்கள் முழு பெயரையும் மக்கள் துரத்தி விட்டார்கள்.எமது கட்சியிலும் மூன்று ஆசனம் கிடைக்கப்பெற்றது எனது வாக்குகளினால் எமது கட்சியிலும் எனக்கு 65,000 வாக்குகள் எனக்கு அடுத்ததாக இருந்தவருக்கு 22,000 வாக்குகள் எனக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குகள் கிடைக்கப்பெறாமல் இருந்திருந்தால் எமது கட்சியிலும் ஒரு ஆசனம் தான் கிடைக்கப்பெற்றிருக்கும்.ஆனால் நாங்கள் இதிலிருந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் தமிழரசு கட்சியை தனித்துவமாக நாங்கள் பலப்படுத்த வேண்டும் எனக்கு மற்றய மாவட்டங்களை பற்றி கூற முடியாது எதிர்வரும் காலங்களில் அந்த பொறுப்பு தரப்பட்டால் ஏனைய மாவட்டங்களை இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டி எழுப்பியது போல ஏனைய மாவட்டங்களையும் கட்டி எழுப்ப தயார்.கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு வருடங்களாக நான் அம்பாறை திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பல சவால்களுக்கு முகம் கொடுத்தோம் அந்த மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக செயல்பட்டோம் அதனால் தான் கிழக்கு மாகாணத்தில் அதிகளவு வாக்குகள் கிடைக்கப்பெற்று தமிழரசு கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் ஐந்து ஆசனங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது.வடக்கையும் கட்டி எழுப்ப நாங்கள் தயார் வாருங்கள் என்று எம்மை அழைத்தால் அங்கும் சென்று வடக்கை கட்டி எழுப்ப நாங்கள் தயார் யாழ்ப்பாணத்திற்கும் வர தயார் வன்னிக்கு வருவதற்கும் தயார் அங்கும் வந்து மக்களுடன் மக்களாக நின்று தமிழரசு கட்சியை கட்டி எழுப்ப தயார்.நாட்டில் ஜனாதிபதி அவர்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆசனங்களை பெற்றுவிட்டார் நாங்கள் உண்மையில் எதிர்பார்த்தது 105 ஆசனங்கள் தான் கிடைக்கப்பெறும் என்று சிங்கள மக்கள் வாக்களித்ததை பற்றி நாங்கள் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனம் வன்னியில் இரண்டு ஆசனம் என்றால் சிங்கள மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்களா அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள் ஆனால் நாட்டில் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க வந்திருக்கின்றார் அவருடைய கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க பெற்று இருக்கின்றது என்பதனை நாங்கள் பெரிய ஒரு பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.இதே போன்று தான் கோட்டா அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது கூறினார்கள் ராஜபக்ஷ ஆட்சி 25 ஆண்டுகளுக்கு தொடரும் என்று ஆனால் ராஜபக்ஷ அரசாங்கத்தை விட இந்த ஜனாதிபதியின் உடைய இனவாதமான செயற்பாடுகள் திருமணமாக இன்னமும் காணவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் நாங்கள் அவரை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.ஒரு படத்தில் கூறுவார்கள் பூ பாதையா சிங்கப் பாதையா என்பதனை அவர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் இப்போதைக்கு பூ பாதையில் செல்கின்றோம் அவர்களுடைய செயற்பாடு மாறுமாக இருந்தால் நாங்கள் இனிய பாதைக்கு சென்று அவர்களை எதிர்க்கவும் தயார்.ஆனால் ஜனாதிபதியின் உடைய சில செயல்பாடுகளும் இன்று காலையில் பார்த்தீர்கள் என்றால் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது 330 மில்லியன் அமெரிக்கன் டாலர் பணம் கிடைக்கப் பெற்று இருக்கின்றது.ரணில் விக்கிரமசிங்கவின் அடி வருடிகள் கூறியது ரணில் விக்ரமசிங்க இல்லாமல் போனால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இல்லாமல் போகும் என்று நாடு பங்குரோத்து நிலையை அடையும் என்றார்கள் ஆனால் ஜனாதிபதி சில விடயங்களை செய்து அந்த நிதி கிடைக்கப்பெற்று இருக்கிறது.தமிழர்களுடைய பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அகற்றுவது ராணுவ பாதுகாப்பு அரன்களை அகற்றப்பட்டிருக்கின்றது இவ்வாறான விடயங்கள் இடம் பெற்று இருக்கின்றது நாங்கள் இப்போது ஜனாதிபதி உடைய கட்சியும் ஒரு புதிய கட்சி அதில் வருகின்ற அமைச்சர்களுக்கு நாங்கள் தான் எவ்வாறு செல்ல வேண்டும் என வழிகாட்டுகின்றோம் பாராளுமன்றத்தில் கொஞ்ச காலம் அவர்களுக்கு வழங்குவோம் மூன்று மாத காலம் வழங்குவோம் எவ்வாறு அவர்களது செயற்பாடு செல்கின்றது என்று பார்ப்போம்.நமது மக்களும் இந்த மாதிரி காலத்தில் விவசாயத்தில் ஈடுபடும் காலம் தானே விவசாயம் அறுவடை செய்து முடித்ததன் பிற்பாடுதான் நமக்கு ஒரு ஓய்வாக இருப்போம் அந்த நேரம் வருகின்ற போது அரசாங்கம் ஓரளவு பழக வேண்டும்.ஜனாதிபதி என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தார் என்னைக் கண்டு வந்து சந்தித்து கையை கொடுத்து "மட்டக்களப்பை மாத்திரம் தான் என்னால் பிடிக்க முடியாமல் போனது" என்று கூறினார் நான் கூறினேன் பிரச்சனை இல்லை நான் தானே அதனை பிடித்து இருக்கின்றேன் என்று கொலைகாரனோ கொள்ளைக்காரனோ பிடிக்கவில்லை நான் தான் பிடித்திருக்கின்றேன் என்றேன் பிரச்சனை இல்லை நாங்கள் சேர்ந்து வேலை செய்வோம் என கூறி இருக்கின்றேன்.பிரதமர் அவர்களை சந்தித்து இருந்தேன் அவரை எனக்கு நீண்ட காலமாக தெரியும் அவரிடம் ஜனாதிபதியின் உரை முடிந்தது பிற்பாடு நான் கூறினேன் ஜனாதிபதியின் உரையில் தமிழ் மக்களுக்கு எதுவும் கூறவில்லை அப்போது அவர் கூறினார் ஆரம்பத்தில் நாங்கள் இனவாதம் கூறவில்லை என்றார் ஆனால் நான் கூறினேன் இனவாதம் என்பது வேறு தமிழ் மக்களது அரசியல் உரிமை என்பது வேறு அரசியல் உரிமை கோருவது இடவாதமாக உங்களுடைய ஜனாதிபதி பார்ப்பார் ஆனால் கஷ்டம் இல்லை அவ்வாறு இல்லை நாங்கள் இணைந்து வேலை செய்வோம் என்று கூறப்பட்டிருக்கின்றது.அதேபோன்றுதான் விஜித்த ஹேரத் அமைச்சர் அவரை சந்தித்து கூறினேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ராஜகம் ஊழல் மோசடி களவு போன்ற இவ்வாறான 34 குற்றச்சாட்டுகள் பிள்ளையானுக்கும் வியாழேந்திரனுக்கும் எதிராக முன்னாள் இருந்த நாட்டினுடைய ஜனாதிபதிக்கும் பிரதமர் அவர்களுக்கும் கையளித்தேன் 34 ஊழல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் மக்களுடைய பணம் எத்தனையோ கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது என்று ஆதாரப்பூர்வமாக ஆவணங்களை வழங்கியிருந்தேன்.முன்னாள் பிரதமர் தினேஷ்குமார் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த போது என்னை வந்து பக்கத்தில் அமருமாறு கூறினார் ஆனால் தான் கூறினேன்.ஊழல்வாதிகளுக்கு மத்தியில் என்னால் இருக்க முடியாது என்று கூறி எதிர்பக்கத்தில் இருந்தேன் ஏனென்றால் அவருக்கு அருகில் பிள்ளையான் இருந்தார்.அந்த கூட்டத்திலே நான் ஒரு ஆவணத்தினை பிரதமரிடம் கையளித்திருந்தேன் இந்த மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் செய்த ஊழல்கள் இருக்கின்றது என்று கொடுத்தேன் அன்று சொன்ன அந்த விடயத்தினை நான் நேற்றைய தினம் நாட்டின் உடைய புதிய அமைச்சராக தெளிவாக விஜித் கேரத்திடம் கூறினேன் இவ்வாறு ஒரு ஆவணம் தயாரித்து வழங்கினேன் ஆனால் இது தான் நடவடிக்கைகளும் அந்த அரசாங்கம் எடுக்கவில்லை என்று.அவர் அந்த நேரத்தில் கூறினார் பிள்ளையான் மாத்திரம் அல்ல வியாழேந்திரன் அவர்களின் வீட்டு வாசலிலும் கூட ஒருவரை சுட்டார்கள் தானே அந்த கோபம் வந்திருக்கின்றது அதனையும் விசாரிக்க போகின்றோம் என கூறினார்.மோசமான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை அவர்கள் கூறிய வாக்குறுதிகளுக்கு அமைய செய்வார்கள் என்றால் நல்லது இந்த பார் அனுமதி பத்திரம் பெற்றவர்களின் பெயர் பட்டியலையும் விரைவாக வெளியிட வேண்டும் என நான் அவர்களிடம் கூறி இருக்கின்றேன் அந்த வகையில் நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.கடந்த காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தும் இந்த பகுதியில் அபிவிருத்திகளை முன்னிறுத்தி இருக்கின்றோம் நாங்கள் அபிவிருத்தியும் செய்திருக்கின்றோம் எதிர்வரும் காலங்களிலும் செய்வோம் நாங்கள் மக்களுடன் மக்களாக நிற்போம் அடுத்து வரப் போகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் இந்த வட்டாரத்திலே முனைக்காட்டில் இருக்கின்ற இரு வட்டாரமும் அதிகூடிய அளவில் இலங்கை தமிழரசு கட்சி வென்றால்தான் இந்த பிரதேச சபையின் ஊடாக கூட பல வேலை திட்டங்களை எதிர்காலத்தில் செய்யலாம்.இது இன்றோடு முடிகின்ற விடயம் அல்ல என்னுடைய இறுதி பரப்புரை கூட்டம் கடந்த 11ஆம் திகதி இடம் பெற்றது அந்த நேரத்தில் நமது கட்சியினுடைய உறுப்பினர்கள் கிராமத்தில் இருந்து சில பரப்புரைகளை மேற்கொண்ட போது வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் பிரச்சினைகளை முகம் கொடுத்தார்கள் நாங்கள் இனிமேல் அந்த அளவுக்கு இடம் அளிக்கக்கூடாது.இனிமேல் எதிர்க்கட்சி என்பது ஒன்று இல்லை இந்த மாவட்டத்தில் ஆளும் கட்சியும் நாங்களே எதிர்க்கட்சியும் நாங்களே வேறு நபர்களுக்கு இங்கு நாம் இடமளிக்க போவதில்லை மக்களினுடைய குறைபாடுகளை கண்டறிந்து நாங்கள் தான் அதற்கு பாராளுமன்றம் வரை கொண்டு செல்வோம் பாராளுமன்றத்தில் தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதி வரை கொண்டு செல்வோம் அங்கும் தீர்வு காண முடியாவிட்டால் சர்வதேசம் வரை கொண்டு செல்வோம்.அதே போன்று எமது அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் நாங்கள் முன்னெடுப்போம் எங்களுடைய வரிப்பணத்தில் கிடைக்கின்ற அபிவிருத்திகளை எமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அதையும் நாங்கள் செய்வோம் ஆனால் எங்களுடைய மக்கள் நாங்கள் எவ்வாறு கூறுகின்றனோ ஜனாதிபதியினுடைய கட்சியும் அமைச்சரோ வந்து இப்போதுதான் வேலை பழகுகின்றார்கள் ஒரு மூன்று மாதம் கால அவகாசம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.நாட்டினுடைய புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் தான் வரும் இப்போது இடைக்கால ஒரு வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போகின்றார்கள் அடுத்த மாதம் நான்காம் மாதத்தில் இருந்து தான் புதிய வரவு செலவுத் திட்டத்திற்கான வேலைகள் இடம் நான்காம் மாதத்திற்கு முன்னர் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் இடம்பெறப் போவதில்லை அதற்கு பின்னர் நாங்கள் பார்ப்போம்.ஆனால் இந்த இடத்தில் இருந்து நாங்கள் கூறுவது ஜனாதிபதிக்கும் ஒரு எச்சரிக்கையாகவோ அல்லது ஒரு கருத்தாக கூறலாம் ஜனாதிபதி சரியாக செயல்படுவாராக இருந்தால் அவர் செய்கின்ற அனைத்து விடயங்களையும் நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை நல்ல விடயங்களை நாங்கள் ஆதரிக்கலாம் ஆனால் தமிழ் இன விரோத செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் ஆனால் அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.தமிழ் இனம் ஒரு தனித்துவமான இடம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் இதில் நாங்கள் மாறப்போவதில்லை ஜனாதிபதியும் எங்களை மாற்ற நினைக்க கூடாது என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்- என்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement