• Aug 18 2025

நல்லூருக்கு அண்மையில் வாள்வெட்டு - ஐவர் கைது

Chithra / Aug 17th 2025, 7:33 am
image


நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று இரவு ஒரு குழுவினர் இன்னொருவர் குழுவினர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு குழுவினருக்கு இடையேயான முரண்பாட்டின்ல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதலை நடாத்திய ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் , வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதேவேளை ஆலய சூழலில் மாத்திரமே காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ள நிலையில், 

நல்லூர் பின் வீதியில் உள்ள திருவிழா கால கடை தெருக்களில் வன்முறை கும்பல்கள், 

போதைப்பொருட்களை பாவிப்போர் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதும் அதிகரித்துள்ளதாகவும், அது தொடர்பிலும் காவல்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

நல்லூருக்கு அண்மையில் வாள்வெட்டு - ஐவர் கைது நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று இரவு ஒரு குழுவினர் இன்னொருவர் குழுவினர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இரண்டு குழுவினருக்கு இடையேயான முரண்பாட்டின்ல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடாத்திய ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் , வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.அதேவேளை ஆலய சூழலில் மாத்திரமே காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ள நிலையில், நல்லூர் பின் வீதியில் உள்ள திருவிழா கால கடை தெருக்களில் வன்முறை கும்பல்கள், போதைப்பொருட்களை பாவிப்போர் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதும் அதிகரித்துள்ளதாகவும், அது தொடர்பிலும் காவல்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement