• Nov 17 2024

இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

Tamil nila / Jun 6th 2024, 9:21 pm
image

முதல் முறையாக கொழும்புப் பல்கலைக்கழகம் உலகின் 1,000 சிறந்த பல்கலைக்கழகங்களிற்குள் இடம்பிடித்துள்ளது.

குறித்த தகவலை துணைவேந்தர் மூத்த பேராசிரியர் எச். டி. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

QS  2025 ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசையை ஜூன் 4, 2024 அன்று வெளியிட்டது.

உலக பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்த ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகம் 951ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் மற்றும் அதிக மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் என்ற சாதனையையும் கொழும்புப் பல்கலைக்கழகம் தமதாக்கியுள்ளது

தரவரிசைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் மூன்று இலங்கைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன, கொழும்புப் பல்கலைக்கழகம் நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமாகத் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் அதன் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் விளைவுகள், கற்றல் அனுபவம், உலகளாவிய ஈடுபாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் செயல்திறனை மதிப்பிடும் வகையில், QS தரவரிசைகள் பல்கலைக்கழகங்களுக்கான உலகளாவிய அளவுகோலாக செயல்படுகின்றன.

இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் முதல் முறையாக கொழும்புப் பல்கலைக்கழகம் உலகின் 1,000 சிறந்த பல்கலைக்கழகங்களிற்குள் இடம்பிடித்துள்ளது.குறித்த தகவலை துணைவேந்தர் மூத்த பேராசிரியர் எச். டி. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.QS  2025 ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசையை ஜூன் 4, 2024 அன்று வெளியிட்டது.உலக பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்த ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகம் 951ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.இலங்கையின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் மற்றும் அதிக மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் என்ற சாதனையையும் கொழும்புப் பல்கலைக்கழகம் தமதாக்கியுள்ளதுதரவரிசைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் மூன்று இலங்கைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன, கொழும்புப் பல்கலைக்கழகம் நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமாகத் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகம் அதன் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதுஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் விளைவுகள், கற்றல் அனுபவம், உலகளாவிய ஈடுபாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் செயல்திறனை மதிப்பிடும் வகையில், QS தரவரிசைகள் பல்கலைக்கழகங்களுக்கான உலகளாவிய அளவுகோலாக செயல்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement