• May 05 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் 87 பொலிஸ் நடமாடும் பிரிவுகள் கண்காணிப்பில்

Chithra / May 5th 2025, 2:56 pm
image


மட்டக்களப்பு மாவட்டத்தில் 87 பொலிஸ் நடமாடும் பிரிவுகள் கண்காணிப்பினை முன்னெடுத்துவருவதுடன் தேர்தல் பாதுகாப்புகளுக்காக 1500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு  கருத்துதெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

விழிப்புலனற்றவர்கள் வாக்களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் விசேட சட்டகம் வைக்கப்பட்டுள்ளதாகவும் உதவியாளர் ஒருவருடன் சென்று விழிப்புலனற்றவர்கள் வாக்களிக்கமுடியும்.

தேர்தல் விதி மீறல்களை எதிர்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல்  விதிமுறை   மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6000க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள்  தேர்தல்பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்

மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முப்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை இடம் பெற உள்ளதுடன்

 இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 55 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் இவர்களுக்காக 477 வாக்களிப்பு நிலையங்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளது

நாளை காலை ஏழு மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும் அதன் பின்பு மாவட்டத்தின் வாக்கண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன இதற்காக மாவட்டத்தில் 144  நிலையங்களில்  பணிகள் முன்னெடு க்கப்பட உள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் 87 பொலிஸ் நடமாடும் பிரிவுகள் கண்காணிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 87 பொலிஸ் நடமாடும் பிரிவுகள் கண்காணிப்பினை முன்னெடுத்துவருவதுடன் தேர்தல் பாதுகாப்புகளுக்காக 1500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.இன்று மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு  கருத்துதெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,விழிப்புலனற்றவர்கள் வாக்களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் விசேட சட்டகம் வைக்கப்பட்டுள்ளதாகவும் உதவியாளர் ஒருவருடன் சென்று விழிப்புலனற்றவர்கள் வாக்களிக்கமுடியும்.தேர்தல் விதி மீறல்களை எதிர்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல்  விதிமுறை   மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்தார்.நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6000க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள்  தேர்தல்பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முப்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை இடம் பெற உள்ளதுடன் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 55 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் இவர்களுக்காக 477 வாக்களிப்பு நிலையங்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளதுநாளை காலை ஏழு மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும் அதன் பின்பு மாவட்டத்தின் வாக்கண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன இதற்காக மாவட்டத்தில் 144  நிலையங்களில்  பணிகள் முன்னெடு க்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement